டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில், சிறுமி வரைந்த ஓவியத்தை அடிப்படையாகக்கொண்டு, பாலியல் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தாய் இறந்து, தந்தையால் அனாதையாக விடப்பட்ட 8 வயது பெண் சிறுமி அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அத்தையின் கணவர் அக்தர் அகமது, அந்தக் குழந்தையை யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிசெய்து வந்துள்ளார். இந்தக் குற்றச்செயல் தெரியவந்ததும் அக்தர் அகமது கைதுசெய்யப்பட்டார். குழந்தை, பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்கான ஆதாரமாக மருத்துவச் சான்றிதழ் இருந்தபோதும், அக்தர் அகமது தன்னை ஓர் அப்பாவியாகக் காட்டி வந்துள்ளார். நீதிபதி, அந்தக் குழந்தையிடம் நடந்த விஷயங்களை வரையச்சொல்லி கிரையான்ஸும் பேப்பரும் வழங்கியுள்ளார். ஒரு வீட்டில் குழந்தை நிர்வாண நிலையில் கையில் பலூன்கள் வைத்திருந்த நிலையில் நின்றுகொண்டிந்தது போலவும், அதன் அருகே ஆடைகள் களையப்பட்டு கீழே இருப்பதுபோல வரைந்திருந்தார். குழந்தையின் ஓவியத்தையும் மருத்துவச் சான்றிதழையும் ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலிருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்