கோட்டயம் கேரளாவில், அநாகரிக பள்ளி சீருடையை படம் எடுத்த போட்டோகிராபர் மீது, 'போக்சோ' எனப்படும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து தடுக்கும் சட்டத்தின் கீழ், பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், அருவிதுரா என்ற இடத்தில் ஒரு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவியரின் சீருடை அநாகரிகமாக உள்ளது எனக்கூறி, ஜாசாரிக் போகுனம் என்ற போட்டோகிராபர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை கோட்டயத்தில் உள்ள இராடுபெட்டா என்ற இடத்தை சேர்ந்த ஒரு நண்பர் அனுப்பி இருந்ததாகவும் போகுனம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து அந்த பள்ளி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அப்பள்ளி மாணவியரும் அநாகரிகமாக உள்ள சீருடையை அணிய மறுத் தனர். இதையடுத்து அந்த புகைப்படத்தை எடுத்த போஸ் இயபென் என்பவர் மீது போலீஸ் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் புகார் அளித்தது. போக்சோ சட்டத்தின் கீழ், போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், ''அந்த போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது. அதில் இருப் பது நாங்கள் அளித்த பள்ளி சீருடை அல்ல. சீருடை குறித்து மாணவியரின் பெற்றோர்கள் கூட இதுவரை புகார் அளித்தது இல்லை,'' என்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சாபு சிரிக் கூறுகையில், ''பள்ளி சீருடை குறித்து எந்த புகாரும் இல்லை. எந்த பெற்றோரும் புகார் கூறவில்லைல. பள்ளி சீருடைகள் இடம் பெற்று இருக்கும் புத்தகத்தை அடிப்படையாக வைத்தே பள்ளி சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. ஆபாசம் என்பது பார்ப்பவர்களின் பிரச்னை,'' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்