ஆம்புலன்சுக்கு டீசல் போட பணம் கொடுக்காததால், சிறுமி ஒருவரின் சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. கௌசாம்பி மாவட்டம் மாலக் சத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவரின் மகள் பூனம், உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உறவினர் ஒருவரிடம் பணம் வாங்குவதற்காக ஆனந்த்குமார் அலகாபாத் செல்ல வேண்டியிருந்தது. சிறுமியின் தாய்மாமா பிரிஜ் மோகன் என்பவரிடம் மகளைப் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு, ஆனந்த்குமார் அலகாபாத் சென் றிருக்கிறார். இதனிடையே, சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி நேற்று இறந்து போனார். சிறுமியின் சடலத்தைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் ஏற் பாடு செய்து தருமாறு மருத்துவர்களிடத்தில் மோகன் கேட்டுள்ளார். 'டீசலுக்குப் பணம் கொடுத்தால் மட்டுமே ஆம்புலன்ஸ் அனுப்ப முடியும் ' என மருத் துவர்கள் கூறி விட்டனர். மோகனிடமோ பணம் இல்லை. தொடர்ந்து, மருமகள் பூனத்தின் உடலைத் தோளில் சுமந்தவாரே 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள சொந்தக் கிராமத்துக்கு மோகன் சைக்கிளில் சென் றுள்ளார். சிறுமியின் சடலத்தை மோகன் சைக்கிளில் கொண்டு செல்வது போன்ற புகைப்படம் இன்று பத்திரிகைகளில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத் தியிருக்கிறது. கௌசாம்பி மாவட்ட ஆட்சியர், மணீஷ்குமார் வெர்மா, பணியிலிருந்த மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்