அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் வருகிற 21ஆம் தேதி சசிகலாவைக் காணொலி காட்சியின் மூலம் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தர விட் டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பரப்பன அக்ரஹாரச் சிறையிலிருந்து வருகிறார். 1996-97 காலகட்டங்களில் வெளிநாடுகளிலிருந்து ஜெயா டிவிக் குத் தொலைத்தொடர்பு வாங்கிய வழக்கில் ஏற்கெனவே சசிகலா, திவாகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது அந்நியச் செலாவணி வழக்கு இருந்து வருகிறது. அமலாக்கத்துறையினர் 5 வழக்குகளில் இவர்கள்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு சுமார் 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்னர் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். சசிகலாவின் உறவினர் பாஸ்கரனும் இந்த வழக்கில் ஒருமுறை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் சசிகலாவுக்கு முதுகுப் பகுதியில் பாதிப்பு இருப்பதால் காணொலி மூலம் பதி லளிக்க அனுமதி அளிக்கவேண்டும் என்று சசிகலா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு நீதிபதி ஜாகீர் ஹூசைன் முன் னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 21 ஆம் தேதி சசிகலாவைக் காணொலியின் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்று கர் நாடக சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்