அ.தி.மு.க அம்மா அணியைப் போன்று நாங்கள் நாடகமாட விரும்பவில்லை' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிளவுப்பட்ட அ.தி.மு.க., மீண்டும் இணைவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். நேற்று, திருவேற்காட்டில் நடைபெற்ற அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், ‘இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தைக் குழு இன்றோடு கலைக்கப்படுகிறது. அணிகள் இணைப்பு தேவையில்லை என மக்கள் விரும்புகின்றனர்’ என்றார். இந்நிலையில், இன்று சென்னையில் ஒ.பி.எஸ் இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அ.தி.மு.க இணைப்புகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், ‘அ.தி.மு.க அம்மா அணியைப் போன்று நாங்கள் நாடகமாட விரும்பவில்லை. அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தையில் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன. தொண்டர்கள் முழுவதும் எங்கள் பக்கம் உள்ளனர். தற்போது ஆக்கபூர்வமான யோசனை எதுவும் வரவில்லை. எனவே, சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்துக்குப் பிறகு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். மேலும், அ.தி.மு.க கட்சி நிர்வாகம் மற்றும் சின்னம்குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், ‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியானவர், மதுசூதனன்தான். முறைப்படியான கழக சட்டவிதிப்படி ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறவர் அவர்தான். இரட்டை இலை தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்’ என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்