இரட்டை இலை விவகாரத்தில் சசிகலா அணியினர் இன்று 4 லாரிகளில் கொண்டு சென்ற ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சசிகலா அணி - ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கேட்டு இரண்டு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, இருஅணியினரின் வாதத்துக்குப் பின்னர் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு இரண்டு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இரு அணி யினரும் மாறிமாறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர். ஏற்கெனவே சசிகலா அணியினர் மூன்று முறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில், 4-வது முறையாக பிரமாணப் பத்திரங்களை சசிகலா அணியினர் இன்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று நான்கு லாரிகளுடன் டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றார். அப்போது, லாரியிலிருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைப் பார்த்து அங்கிருந்த அலுவலர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு லட்சத்து 52 ஆயிரம் பிரமாணப் பத்திரங்களை சசிகலா அணியினர் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 3,10,000 பிரமாணப் பத்திரங் களை சசிகலா அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்