வளர்ந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில், அரசியல் கட்சிகளும் அதற்குத் தகுந்தவாறு தங்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில், 'தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி' என்ற புதிய துணை அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதை, தி.மு.க-வின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் காலத்திற்கேற்ற வகையில், அனைத்துத் தரப்பு மக்களிடமும் விரைந்து கொண்டுசெல்லும் வகையில், 'தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி' எனும் புதிய துணை அமைப்பு உருவாக் கப்பட்டுள்ளது. முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏனைய நிர் வாகிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்