இந்திய ராணுவத்தில் விரைவில் பெண்கள் சேர்க்கப்பட உள்ளதாக, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். உலகில் பல்வேறு நாடுகளின் ராணுவங்களில் பெண் வீராங்கனைகள் உள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில், ராணுவ வீரர்கள் பாசிங் அவுட் பரேட் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "ஜம்மு காஷ்மீரில் பெண் போராட்டக்காரர்களும் ராணுவத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆண்களை, ராணுவ வீரர்கள் தடுத்து விடுவார்கள். ஆனால், பெண் போராட்டக்காரர்களை அவர்களால் தடுக்க முடியாது. இதனால், முதல் கட் டமாக, ராணுவ காவல் படையில் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும்" என்றார். தற்போது ராணுவத்தில் மருத்துவம், பொறியியல், கல்வி உள்ளிட்ட துறைகளில்தான் பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிட த்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்