போயஸ் கார்டன் வீட்டிற்கு இன்று திடீரென வந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. நீண்ட நேரம் அவர் வாயிலிலேயே காத்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் தீபா. அப்போது பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது, 'என் சகோதரர் தீபக் அழைத்ததாலேயே நான் இன்று காலை போயஸ் கார்டன் 'வேதா இல்ல'த்துக்கு வந்தேன். ஜெ., புகைப் படத்துக்கு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி தீபக் என்னை அழைத்தார். ஆனால், இன்று காலை நான் இங்கு வந்தபோது, கார்டன் இல்ல பாது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டேன். பின் அவர்கள் என்னையும், என்னுடன் வந்தவரையும் தாக்கினர். நான் அடித்து துரத்திவிடப்பட்டேன். இதை வீடியோ எடுத்த தனியார் தொலைகாட்சி செய்தியாளரையும் அவர்கள் தாக்கினர். சசிகலாவுடன் சேர்ந்துக்கொண்டு என் சகோதரர் தீபக் சூழ்ச்சி செய்கிறார். திட்டமிட்டே இன்று நான் வரவழைக்கப்பட்டேன். சசியுடன் சேர்ந்துக்கொண்டு என் அத்தை ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் தீபக். என்னையும், என் கணவரையும் கொல்ல சதி நடக்கிறது. பணத்திற்காக சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து என் அத்தையை கொன்றுவிட்டார் தீபக். என்னை தாக்கியவரை அடையாளம் காட்டத்தயார். இதுகுறித்து பிரதமரை சந்தித்து நான் புகார் அளிப் பேன்' என ஆவேசமாக பேட்டியளித்தார் தீபா. அப்போது, அவரின் கணவர் மாதவனும் உடனிருந்தார். ஆனால், இதைமறுத்துள்ள தீபாவின் சகோதரர் தீபக், 'எந்த பிரச்னையும் நடக்கவில்லை. நான் தீபாவை அழைத்தேன். அவர் வந்து ஜெ., படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு சென்றார்', என மிகவும் ஆசுவாசமாக பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்