சென்னை, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் தமிழகத்தின் இன்றைய நிலையை மாற்ற முடியாது என்று கருத்துக் கணிப்பில் மக்கள் அதிரடியாக பதில் அளித்துள்ளனர். ரஜினி சிறந்த நடிகர். ஆன்மிகவாதி என்பதில் தமிழக மக்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவரை ஓர் அரசியல்வாதியாக நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவர் அரசியலுக்கு வந்தாலும் தமிழகத்தை திருப்பி போட்டு விட மாட்டார் என்று பெரும்பாலான மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். நக்கீரன் இதழ், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செதால் மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளது. கடந்த 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில், தமிழகத்தின் பல பகுதிகளில் மொத்தம் பத்தாயிரம் பேரை சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளதாக நக்கீரன் தெரிவித்துள்ளது. அதில் ரஜினி தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, ‘சினிமாவில் ரஜினி செவது போல, நிஜத்திலும் ரஜினியால் அரசியல் நிலை மாறுமா? என நக்கீரன் இதழ் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘ரஜினி சோன்னது மாதிரி அரசியல் நிலையை மாற்றுவார்’ என 25 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினியால் முடியாது ஆனால், 33 சதவிகிதம் பேர் அது பற்றி தெரியாது, என கூறியுள்ளனர். ‘ரஜினியால் இப்போது இருக்கும் அரசியல் நிலைப்பாடு மாறாது’ என 42 சதவிகிதம் பேர் உறுதிபட தெரிவித்துள்ளனராம். அதாவது, ரஜினி அரசியல் நிலையை மாற்றிவிடுவார் என நினைப்போரை விட அவரால் முடியாது என நினைப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கருத்து கூற மறுப்போரும், ரஜினி மீது இன்னும் முழு நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற கணக்கின்கீழ் பார்க்கப்பட வேண்டியவர்கள். ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தனியாக போட்டியிட வேண்டுமா? அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டுமா?’ என்கிற கேள்விக்கு, அவர் எந்த முடிவெடுத்தாலும் சரி என 39 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்