img
img

மாட்டிறைச்சி தடையால் ஆவேசம்! பா.ஜ.க.விலிருந்து வெளியேறும் கட்சியினர்
சனி 10 ஜூன் 2017 18:18:55

img

கால்நடைகள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கட்யிலிருந்து விலகியுள்ளனர். கால்நடைகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. தற்போது பா.ஜ. கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலய மாநில பா.ஜ.க தலைவர் பெர்னாடு மாரக் ஜூன் 1-ஆம் தேதி கட்சியிலிருந்து வெளியேறினார். இதுகுறித்து பேசிய அவர், 'பா.ஜ.க பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. பழங்குடியின மக்களுக்கென்று தனிச்சட்டங்கள் இருக்கின்றன. பா. ஜ.க 'இந்துத்துவாவை' திணிக்க முயற்சி செய்கிறது' என்று குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில், மேகாலயாவில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து இன்று வெளியேறினர். அவர்களும் மத்திய அரசின் முடிவு பழங்குடியின மக்களுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டி யுள்ளனர். மேலும் பா.ஜ.கவிலிருந்து வெளியேறியவர்கள் இன்று மாலை மாட்டுக்கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img