மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசத்துடன் கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலி யுறுத்தினார். இதுநாள் வரைக்கும் மத்திய அரசு சார்பில் எந்த பதிலும் தமிழக அரசுக்கு வரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சித்தா உள்ளிட்ட மருத் துவப் படிப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, மத்திய அரசுக்கு எதி ராக குரல்கொடுத்தார். "மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது. சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை தமிழகம் ஏற்காது. மலேசியாவில் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க.வில் பிளவு என்பதை தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தற்காலிகமானது தான்" என்று தம்பிதுரை கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்