img
img

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்குத் தடை!
வெள்ளி 09 ஜூன் 2017 17:40:10

img

மலேசியாவுக்குள் நுழைய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில், வைகோவின் பெயரும் உள்ளதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல்செய்து நடவடிக்கை எடுக் கப்பட் டுள்ளது. இன்றிரவு, விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார் அவர். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புகொண்டி ருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ம.தி.மு.க தலைமைக் கழகம், 'மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகள் திருமண வரவேற்பு, ஜூன் 10 சனிக்கிழமை மாலை பினாங்கில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்த அழைப்பை ஏற்று மலேசியாவுக்குச் செல்வதற்காக சென்னையி லுள்ள மலேசியத் தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பித்தார். மலேசியத் தூதரகம் கடந்த வாரமே வைகோவுக்கு விசா வழங்கிவிட்டது. அதன்படி, நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியா புறப்பட்டார். இன்று காலை 6.30 மணிக்கு கோலா லம்பூர் வானூர்தி நிலையம் சென்றடைந்தார். மலேசிய குடிவரவு சோதனையில், “நீங்கள் மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. எனவே, எங்களது குடிவரவு மேல் அதிகாரிகளைச் சந்தியுங்கள்,” என்று கூறி, அங்கே அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த உயர் அதிகா ரிகள், ‘நீங்கள், இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்’ என்று சொல்லி, விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகப் பல கேள்வி களைக் கேட்டனர். ‘இலங்கையில் உங்கள்மீது பல வழக்குகள் உள்ளன’ என்று சொன்னார்கள். “இல்லை, நான் இந்தியக் குடிமகன்,” என்று வைகோ கூறி, கடவுச் சீட்டைக் காட்டியபோதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லை. 'மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. எனவே, உங்களை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது,' என்று கூறி, வைகோவின் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டனர். இந்தத் தகவலை பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு வைகோ தெரிவித்தார். அவரும், பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் -கும் எவ்வளவோ முயற்சித்தும் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. “துணைப் பிரதமர் அலுவலகத்திலிருந்தே எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது. அவரை நாங்கள் அனு மதிக்க முடியாது,” என்று சொல்லி, குடிவரவு அலுவலகத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் வைகோவை உட்காரவைத்தனர். “நீங்கள் இந்த இடத்தை விட்டு எழுந்துபோகக்கூடாது. உங்கள் செயலாளர் அருணகிரிக்கு மலேசியா விசா உள்ளது. அவர் முதல் மாடியிலுள்ள உணவகத்துக்குச் சென்று, உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரலாம்,” என்று சொன்னார்கள். அதற்கு வைகோ, “நான் எதுவும் சாப்பிட விரும்பவில்லை,” என்று சொன் னார். அதிகாரிகள் திரும்பக் கூறியபோதும் சாப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டார். இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வந்து சேர்கின்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வைகோவைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அதிகாரிகள் செய்துள்ளனர். துணை முதல்வர் இராமசாமி, வைகோவிடம், “ஐயா, உங்களை ஏதும் துன்புறுத்தினார்களா?” என்று கவலையோடு கேட்டார். அதற்கு வைகோ, “அப்படி எதுவுமில்லை. ஆனால், யாரும் சந்திக்க முடியாத இடத்தில் உட்காரவைத்திருக்கிறார்கள்,” என்று கூறினார்', என அறிக்கை வெளியிட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img