சென்னை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவி அம்ருதாவை ரஜினி சமீபத்தில் சந்தித்தார். இதையடுத்து கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட முதல்வரின் மனைவியை ரஜினி சந்திக்க வேண்டிய காரணம் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரஜினியை சந்தித்தது குறித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அம்ருதா, ரஜினியை இன்று சந்தித்தேன். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதித்தோம் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்ட இந்த தகவல் தமிழக அரசியல் பார்வையில் ரஜினியின் மெதுவான நகர்வை காட்டுவதாக செய்திகள் வெளியாகின. அதாவது ரஜினி யின் அரசியல் சர்ச்சைகள் எழுகின்ற இந்த காலப்பகுதியில் அவர் தமிழகம் தவிர்ந்த பிறமாநிலங்களின் பிரபலங்களுடன் அரசியல் குறித்து ஆலோசித்து வருகிறாரா என்பது பெரும் கேள்வியாகும். காலா திரைப்படத்தில் முழுமூச்சாகி விட்ட ரஜினிகாந்த திரைப்பட வெளியீட்டின் பின்னர் முழுமையாக அரசியலில் குதிப்பதாக தமிழக ஆரூடங்கள் பல வெளிப்படையாக சொல்லிவிட்டன. அதேவேளை ரஜினி வழக்கமாக தன் திரைப்படத்தை வெற்றியாக்குவதற்கு அரசியலை சீண்டிப்பார்ப்பது புதிரான தல்ல எனவும் தமிழகத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அம்ருதா ஒரு தேர்ந்த பாடகி என்பதால் காலா படத்தில் அவர் ஒரு பாடல் பாடவுள்ளார். இதனாலேயே அவரை ரஜினி சந்தித்துள்ளார் என் கிற உறுதியற்ற தகவலொன்றும் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்