தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது' என்று ஆருடம் சொல் கிறார் தி.மு.க முன்னாள் அமைச்சர் ராசா. அரியலூர் மாவட்டம் தா.பழூர் மேற்கு ஒன்றியம் தி.மு.கவின் புதிய கிளை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி சுத்தமல்லி கிராமத்தில் நேற்று நடை பெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புப் செயலாளருமான ராசா அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். தமிழகத்தில் அ.தி.மு.க அரசு இன்றைக்கு செயல்படுகிறதா என்று சந்தேகம் பலருக்கும் எழுந்துகொண்டே இருக்கிறது. மக்கள் நலனைப் பற்றி அ.தி. மு.க அரசு கவலை கொள்ளாமல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அணியாக பிரிந்து மக்களை குழப்பும் ஆட்சியை இன்றைக்கு நாம் பார்க்கிறோம். மக்க ளுக்கு சேவை செய்ய இந்த அரசு முன்வரவில்லை. அ.தி.மு.க.வினர் அவர்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் துடித் துக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலை யார்க்கு என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது அவர், 'ஒ.பி.எஸ் தரப்பினரும், எடப்பாடி தரப்பினரும் ஒன்றறை கோடி தொண்டர்களின் ஆதரவு எங்களுக்குள்ளது கண்டிப்பாக எங்களுக்கு இரட்டை இலை கிடைக்கும் என்று மாறிமாறி சொல்லி வருகிறார்கள். அப்படி யாருக்குத்தான் ஆதரவு இருக்கிறது என்பதை தெளிவு படுத்தவேண்டும். பி.ஜே.பியின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. இன்றைக்கு மத்திய அரசு தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகளை அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறது. இதற்கு அ.தி.மு.க பலிகிடா வாகப் போகும் நிலை உள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் மாபெரும் அரசியல் தலைவராக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்து வருகிறார். மத்திய அரசை எதிர்த்தும், விமர்சித்தும் தி.மு.கதான் துணிச்சலாக குரல் கொடுக்கிறது. ஸ்டாலின் தினம் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். தமிழத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க ஆட்சி நடத்த மக்கள் விரும்புகிறார்கள். பி.ஜே.பி யின் முதல் பலி அ.தி.மு.க. பி.ஜே.பி-க்கு தகுந்த பாடம் கற்பிக்க தி.மு.கவால் மட்டுமே முடியும்' என்று முடித்துக் கொண்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்