கத்தார் தடை விவகாரத்தில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட் டரில் பதில் அளித்துள்ளார். கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்' என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில், ’கத்தார் உடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், கத்தாரில் வாழும் தமிழகர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நிலை தெரியாமல், இங்குள்ள அவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை, வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், ஏற்கெனவே நடவடிக்கை எடுத் திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கத்தார் தலைநகரம் தோஹாவில் உள்ள தூதரகத்தைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலி யுறுத்தியிருந்தார். சுஷ்மாவுக்கு அனுப்பிய கடிதத்தைத் தன் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார் ஸ்டாலின். அந்தப் பதிவுக்கு, சுஷ்மா ஸ்வராஜ் ரிப்ளை செய்துள்ளார். ’கத்தாரில் உள்ள ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்’ என்று ட்வீட் செய்துள்ளார். சமூக வலைதளங்களால் அரசியல் தலைவர்களின் அணுகுமுறை மாறிவருகிறது. கோரிக்கையை ட்விட்டர் வாயிலாகக் கேட்டதற்கு, உடனடி யாக ட்விட்டரிலேயே பதிலும் கிடைத்துவிட்டது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்