ஓ.பி.எஸ் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்' என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இரட்டை இலை' சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், ஜாமீனில் வெளியான பிறகு, தமிழக அரசி யலில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. தினமும் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் தினகரனைச் சந்தித்துவருகின்றனர். இதனிடையே, இன்று டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'ஸ்டாலின், மைத்ரேயன் கூறுவதைப்போல, இரண்டு மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை' எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'டி.டி.வி.தினகரனுக்கு பெருகிவரும் ஆதரவு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அ.தி.மு.க-வுக்கு தலைமைதாங்க டி.டி.வி. தினகரனுக்கு மட்டுமே தகுதி உண்டு.சந்திக்காத கழகத்தினர் சிந்தையிலும் டி.டி.வி.தினகரனே உள்ளார்' எனக் கூறியுள்ளார். மேலும், அமைச்சர் ஜெயக் குமார் நன்றி மறந்து நாகரிகமின்றிப் பேசுகிறார்' எனவும் அவர் விமர்சித்துள்ளார். இரு அணிகளின் இணைப்பு குறித்து பேசிய அவர், ' 60 நாள்களுக்குள் இரு அணிகளும் இணைய வேண்டும் எனவும், ஓ.பி.எஸ் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்' எனவும் கூறியுள்ளார். 'டி.டி.வி.தினகரனின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்