எம்.எல்.ஏக்கள் சந்திப்பு; அறிக்கைகள் வெளியிடுவது என அண்ணா தி.மு.கவின் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார் டி.டி.வி.தினகரன். இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளனர். இந்தக் காட்சிகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் அமைச்சர்கள். 'தினகரனை சந்தித்துவிட்டு வந்த எம்.எல்.ஏக்கள் பலரும், எடப்பாடி பழனிசாமியுடனும் நல்ல நட்புறவில் உள்ளனர்' என் கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த நாளில் இருந்து, தன்னுடைய செல்வாக்கைக் காட்டும் வகையில் வலம் வருகிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். அவர் சிறை சென்ற காலத்தில், நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி ஆகியோர் மட்டுமே, சில மாவட்டங்களில் கண்டனக் கூட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்தனர். தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட எம்.எல்.ஏக்கள் பலரும் சசிகலா ஆதரவு முழக்கத்தை முன் வைக்கின்றனர். ‘தினகரனை எத்தனை எம்.எல்.ஏக்கள் சந்தித்தாலும், என்னுடைய ஆட்சிக்கு எந்த இடையூறும் வரப் போவதில்லை. இந்த ஆட்சிக்கு எதிராக எம்.எல். ஏக்கள் செயல்பட மாட்டார்கள்' என நம்பிக்கையோடு பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்களால் கொதிப்பில் உள்ளனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். 'இந்தளவுக்கு அவர் பேச யார் காரணம்? அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வருக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள், தலை மைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பேசிய எம்.எல்.ஏ ஒருவர், 'எங்கள் இருவரில் ஒருவரை அமைச்சர் ஆக்குங்கள் அல்லது பன்னீர்செல்வம் பக்கம் இருந்து வரும் எங் கள் சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பதவி கொடுங்கள். அம்பா சங்கர் கமிஷன் அறிக்கையில், உங்கள் சமூகத்துக்கு இணையாக நாடார் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரவையில் அதற்கேற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 'யாருக்குப் பதவி கொடுப்பது?' என்ற குழப் பம் ஏற்பட்டால், டாஸ் போட்டுப் பார்த்துப் பதவி கொடுங்கள். தலை விழுந்தால் எனக்கும் பூ விழுந்தால் 'செல்வ'மானவருக்கும் பதவி கொடுங்கள். ஒருவேளை எங்களுக்குப் பதவி கொடுக்க முடியவில்லை என் றால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேறு யாரையாவது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என விவரிக்க, இதற்குப் பதில் அளித்த முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நான் கட்டாயம் செய்கிறேன். உங்கள் சமூகத்தினர் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பவர்கள். அம்மா இருந்தவரையில், உங்களை மிகவும் கௌரவமாக வைத்திருந்தார். அமைச்சரவையில் நீங்கள் இணைவது எனக்கும் நல்லதுதான். தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை நீங்களும் பார்த்துக் கொண்டுதானே வருகிறீர்கள்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு எம்.எல்.ஏக்கள் இருவரும் ராக்கெட் ராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 'ராக்கெட் ராஜாவை என்கவுண்ட்டர் செய்வதற்கான வேலைகளில் போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே, வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்ட்டர், 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.கவின் படுதோல்விக்குக் காரணமாக அமைந்தது. 'ராதிகா செல்வியின் கண்ணீருக்குப் பதில் சொல் லுங்கள்' என்று தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்னையாக்கியது தி.மு.க. அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்துவிட்டோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு போகும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராக்கெட் ராஜாவை என் கவுண்ட்டர் செய்யத் துடிக்கும் அதிகாரியிடம் பேசுங்கள்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர். சந்திப்பின் இறுதியில், 'அரசு ஒப்பந்தங்களிலும் எங்கள் சமூகத்து ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' எனக் கூறியுள்ளனர். “எம்.எல்.ஏக்களில் பலரும் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். 'ஒருநாளாவது அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும்' என் பதற்காகத்தான் தினகரனை சந்திக்கின்றனர். 'ஆட்சிக்கு எந்த இடையூறும் வரப் போவதில்லை' என்பதை அறிந்தவுடன், எடப்பாடி பழனிசாமியுடனும் நட்பு பாராட்டுகின்றனர். அதற்கேற்ப, எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 'எந்தவித சிர மம் இல்லாமல் சட்டசபைக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும்' என விரும்புகிறார்.அமைச்சர் பதவிக்குப் பூவா? தலையா? போடுவாரா’ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்