img
img

தமிழகத்தில் நடக்கும் பொம்மை ஆட்சி!
புதன் 07 ஜூன் 2017 18:25:06

img

சாணக்கியன் இரட்டை இலைச் சின்னத்தை முழுவதுமாக முடக்கி, அதிமுகவை கூறுகளாக்கி, ஆட்சியை சிதறவைத்து, ரஜினியின் முதுகில் ஏறியோ அல்லது கூட் டணி அமைத்தோ, அல்லது அதிமுகவை அனுமதிக்க வைத்தோ தமிழகத்தில் தாமரையை மலரவைத்து விடவேண்டும் என்பதே பாஜக வின் இப் போதைய குறி! இரு பெரும் கூறுகளாகப் பிரிந்துகிடக்கும் அதிமுகவில் ஆளுக்காள் சேர்த்து வைத்த ஊழலில் யார் பெரியவர் என்பதில் நெருக்கடியான போட்டி நிலவும் ஊழலின் ஊற்றுக்கண்கள் எல்லாம் டில்லி தலைமைக்குப் பயந்து பாஜகவின் அடிவருடிகள் ஆகிவிட்டன. ஜெ. காலத்தில் அவரைச் சந்திப்பதற்கே தடுமாறியும், தவணை கேட்டும் தவித்த பாஜக தலைமையை இன்று தமிழகத் தலைமைகள் ஓடி ஓடிப்போய் சந் திக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறது நிலைமை. எனவே தமிழகத்தில் இப்போதும், எப் போதும் என்ன நடக்க வேண்டுமோ அதைத் தீர்மானி ப்பது டில்லி தலைமையின் அட்டவணை மட்டும்தான். தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், எடப்பாடியின் சம்பந்தியுமான தங்கமணி, டில்லிக்கும் தமிழக முதல்வர் தரப்பிற்குமான ஒருங்கிணைப் பாளராக செயல்படத் தொடங் கிவிட்டார். எவ்விதத்திலும் உங்களை மீறி தமிழகத்தில் எந்த செயல்பாடுகளையும் செய்யமாட்டோம் ஐயா என் பது இன்றுவரை அதிமுக எழுதிக் கொடுக்காத பாக்கி மட்டும்தான்.மத்திய அரசை அனுசரித்து நடந்தால் நல்லது என மிரட்டல் தொனியில் வெங்கய்ய நாயுடு முதல்வரை வைத்துக்கொண்டு பேசிய போதும், அமைச்சர்கள் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் கைகட் டிப் பார்த்துக் கொண்டிருக்கும் புள்ளைப்பூச்சிகளாக மாறியி ருப்பது அதிமுக ஆட்சிக்கே ரொம்பவே புதிது. ஜெயலலிதா இருந்தவரை வாலாட்ட முடியாத எல்லா விவகாரங்களையும் இன்று தமிழகத் தலைமைகளின் தலையை ஆட்டவைத்தே வென்று விடுகின்றது பாஜக தலைமை. நீட் தேர்வு, மைல் கற்களில் இந்தித் திணிப்பு, விவசாயிகள் பிரச்சினை, காவேரி விவகாரம் எல்லாவற் றிலும் தமிழக அரசியல் ஆசாமிகள் சொல்கேட்கும் கிளிப்பிள்ளையாகிவிட்டார்கள். தமிழக அரசை அமைதிப் பாலைவனமாக்கிய மணல் மாஃபியா சேகர் ரெட்டியை, பாஜக தலைக்குமேல் வைத்துக் கொண்டாடியிருக்க வேண்டும். ஏனெ னில் அவரின் வாக்கு மூலத்தால் மாட்டிக்கொண்ட அதிமுக அரசின் லஞ்சம், ஊழல்கொண்ட அரசியல் பேர்வழிகள் கையும் களவுமாக பிடிக்கப்பட் டதுடன் இனி அவனின்றி அணுவும் அசையாது என்ற அளவில் மோடி அரசின் பாதங்களில் சரணமாகிவிட்டனர். காரணம் ஒவ்வொருவருடைய கறுப்புப் பணத்தின் ஒவ்வொரு ரூபாவையும் ஆதாரத்துடன் காட்டியதாம் மத்திய தலைமை. இந்த அடிப்படையில் கடுமையாக மாட்டிக்கொண்ட வரில் மிகப் பெரும் புள்ளிதான் பன்னீர்செல்வம். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பன்னீர்செல் வத்தின் லாபக் கணக்குகளை கார்டனுக்குச் சொல்லி மலைக்க வைத்த சேகர் ரெட்டி, விசா ரணை அதிகாரிகளின் விழிகளை அகல விரியச் செய்திருக்கிறார். ஆஹா... எடுத்ததற்கெல்லாம் கண்ணீர் விட்டு அழுகின்ற, இடுப்பை அம்பாக வளைக்கின்ற சாது பன்னீருக்குள் இத்தனை சாதுரியமா? பொதுப்பணித்துறையில் நடந்த கோடிக்கணக்கான ஊழலில் பாஜகவின் காலைச் சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பாக மிகப் பெரும் பீதியில் எப்போதும் தன் தலை தப்புமா என்ற தன்னை பயமுறுத்தும் சிந்தனைகளால் சுழன்றுகொண்டிருக்கும் பன்னீரால் மத்திய அரசின் கைப்பாவையாக மட்டுமே செயல்பட முடியுமே தவிர தமிழக நலனில் எவ்வகையான விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பமுடியாத சூழ்நிலை. எனவேதான் எங்கு போனா லும் ஜெயாவின் மரணத்தில் உள்ள மர்மத்தைத் தவிர வேறு எதையும் பேசத் திராணியற்ற வராக இருக்கிறார் பன்னீர். ஒரு கையில் ஓபிஎஸ், மறு கையில் ஈபிஎஸ் என இரு கைகளிலும் கயிற்றை வைத்துப் பயணிக்கும் மாட்டுவண்டியாக தமிழக அரசியலை விவரமாக, வேக மாக, விவேகமாக ஓட்டு கிறது மத்திய அரசு. இவ்விரு அர சியல் பொம்மைகளும் தங் களைத் தற்காத்துக் கொள்வதில் கடுமையாகப் போராடுகிறதே தவிர தமிழக மக்களின் நலனில், அரசியல் சார்ந்த நல்லெண்ணப்பாடுகளில் கடமை தவறுகின்றன. தெளிவாகச் சொன்னால் தமிழக மண்ணிற்கு பச்சைத் துரோகம் செய்வதை தலையாய பணியாக்கிவிட்டன. ஜெயாவின் மரணத்தை மத்திய அரசு துயரமாக பார்த்ததோ இல்லையோ, அவரின் மறைவை அரசியல் ரீதியாக ரசித்தது. அதாவது இரட்டை இலை வாடியபோது தண்ணீர் தருவதற்குப் பதில் அதைப் பிடுங்கி பத்திரமாக வீசி விட்டு அதே மண்ணில் தாம ரையை விதைத் துவிடும் விவசாய வித்தையை மிகக் கவனமாக கையாண்டது மோடி அரசு. என வேதான் சசிகலாவின் குடும்ப அர சியலால் பிசுபிசு த்திருந்த அரசியல் நாட கங்கள் பலவற்றிலும் ஆளு நர் உட்பட பலவகைப்பட்ட கதாபாத் திரங்களை பாஜக ஏற்று நடித்திருந்தது. ஆர்கே நகர்த் தேர்தலை அவசரமாக நிறுத்தவும், இரட்டை இலைச் சின்னத்தை உடனடியாக முடக்கவும் டில்லி தலைமை அதிக அளவில் தீவிரம் காட் டியதன் நோக்கமும் அது தான். அதாவது பாம்புக்கும் நோகாமல், கம்பும் உடையாமல் இரண்டையுமே கக்கத்தில் வைத்து கம்பு சுற்றப் பார்க்கும் வேலை யாக எடப்பாடி அரசையும், எதிரான பன்னீர் கட்சியையும் பதம்பார்த்து பயணிக்கிறது பாஜக அரசு. இவ்விரு தலைகளும்கூட பாஜகவுக்கு யார் அதிகமாக வக்காளத்து வாங்குவது, யார் அதிகமாக வேலைசெய்வது என்பதில் போட்டா போட்டிப்பா! ஈபிஎஸ்ஸை தட்டி விடுவது, ஓபிஎஸ்ஸை வைத்து ஈபிஎஸ்ஸைத் தட்டி கேட்பது என இரட்டை விளையாட்டு விளையாடும் மத்திய அரசின் கிடுக்குப் பிடியின் இடுக்குகளில் பாவம் ஒரு மாநிலமும், மக்களும் மாட்டித் தவிக்கிறது. திணையை விதைத்து விட்டு தேங்காயை அறுவடை செய்யமுடியுமா என்ன? பணத்துக்காக வாக்களித்து தங்கள் தலைவர்களை அடையாளப்படுத்தி விட்ட பிறகு பண நாயகத்தைத் தவிர ஜன நாயகத்தையா எதிர்பார்க்க முடியும்.? இதையெல்லாம் கவனிக்கையில் உள்ளுக்குள் ஒரு கேள்வி எழுகிறது. என்னவெனில் வந்து அரசியல் செய்தவன் முட்டாளா அல்லது வாக்களித்த நீங்கள்தான் முட்டாள்களா? முட்டாள்களை தேர்வு செய்த நீங்க எல்லாம் அறிவாளிகளாகவா இருக்கமுடியும். அல்லது அறிவாளிகள் ஒரு முட்டாளையா தேர்வு செய்து இருப்பார்கள்? இந்த கேள்வியும் ஒரு முட்டாள் தன மாகவேதான் தோணுகிறது இன்றைய தமிழக அரசியலைப் போல.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img