சென்னை அதிமுக-வில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் கணிசமான ஆதரவு டி.டி.வி.தினகரனுக்கு பெருகி கொண்டே வருகிறது. நேற்றிரவு வரை 27 M.L.A-க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று தற்போது வரை 4 M.L.A-க்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர். இதனையடுத்து தினகரன் ஆதரவு M.L.A-க்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் எடப்பாடி அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜியும், தினகரன் மற்றும் சசிகலாவிற்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ இருவரும் தினகரனின் அடையாறு இல்லத்திற்கு சென்று அவரை ஆதரவு தெரிவித்தனர். 31-வது MLA-வாக பெரியபுள்ளான் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் கட்சி விவகாரத்தில் அமைச் சர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தினகரனை M.L.A-க்கள் சந்திப்பது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா தான், டிடிவி தினகரன் தான் துணை பொதுச் செயலாளர் என திட்டவட்டமாக கூறினார். சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக வரும் ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் வரும் என்றார். எங்களுக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் உள்ளதாக கூறிய அவர், விரைவில் அவை சரிசெய்யப்பட்டு அனைவரும் ஒன்று சேர்வோம் என்றார். கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் தின கரனை அனைவரும் சந்தித்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போது தாமும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்