குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறி விக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்திலிருந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத் தலைவர் நஜிம் ஜைதி, குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளன. இருப்பினும், பா.ஜ.க இந்த முறை தனியாகவே வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றிருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்தியாவின் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்டவற்றில் பா.ஜ.க ஆளும் கட்சியாக இருக்கும் நிலை யில், பா.ஜ.க அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. அரசியல் கட்சிகள், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தீவிரமாகத் தயாராகிவருகின்றன. இந்த நிலையில், இன்று மாலை குடியரசுத் தலைவர் தேர்தலுக் கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி அறிவிப்பு வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்