சென்னை தமிழக ஆளும் கட்சியான அதிமுகவில் ஏற்கனவே முன்னாள் முதல் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலை யில், தற்போது எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி.தினகரன் அணி என அக்கட்சி மூன்றாக பிளவு படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த நில நாட்களாக தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் பழனிச்சாமி அணிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இடையேயான மோதல் முற்றியுள்ளது. டிடிவி தினகரனுக்கு எதிரான அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பை எதிர்த்தும், தினகரனுக்கு ஆதரவாகவும், வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் உள் ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் குரல்கொடுத்தனர். தினகரனை நீக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு அந்த அதி காரத்தை கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. டிடிவி தினகரனை இன்று சந் தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் செய்தி வரும் என்றார். இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் கருத்து பற்றி நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது:- தொகுதி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சரை சந்தித்தோம். தங்கத்தமிழ்ச்செல்வன் கூறி யதை பொருட்படுத்த வேண்டாம். எம்எல்ஏக்கள் தனிப்பட்ட முறையில் தினகரனை சந்தித்து இருப்பார்கள், அதனை அரசியலாக்க வேண்டாம். முத லமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும். வழிகாட்டு குழுவின் அடிப்படையில் கட்சி வழிநடத்தப்படுகிறது” என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்