மதுரை அ.தி.மு.க.அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழி நடத்தியவர்கள் சசிகலாவும், தினகரனும்தான். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம் பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முழுகாரணம் சசிகலா, தினகரன். இவர்களது உழைப்பை புறந்தள்ளிவிட்டு ஆட்சியையும், கட்சியையும் நடத்த முடியாது. டி.டி.வி.தினகரன் ஒரு வலிமைமிக்க தலைவராக திகழ்கிறார். அவரது தலைமையில்தான் அ.தி.மு.க. வெற்றிநடை போட முடியும். அவர் கட்சிப் பணி செய்வதற்கு முதல்-அமைச்சரின் அனுமதி வேண்டும் என்பதுபோல சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது கேலி கூத்தாகும். முதல்- அமைச் சர் அவரது உதவியாளருக்கு வேண்டுமானால் கட்டளையிடலாம். ஆனால் தினகரனுக்கு கட்டளையிடும் அதிகாரம் அவருக்கு இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவுடன் தினகரன் இந்த இயக்கத்தை வலிவோடும், பொலி வோடும் நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்