அமைச்சர்களின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே மோதல் நீடித்து வருகிறது. கிரண்பேடி புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே மோதல் நீடித்து வருகிறது. தற்போது மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் 'நான் நல்ல நிர்வாகியாக செயல்படவேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்படவேண்டுமா? என்று கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாராயணசாமி, சட்டசபையில் பேசியுள்ளார். அவர் 'எம்.எல்.ஏக்களின் அனுமதி இல்லாமல் ஆளுநர் தொகுதிக்குள் நுழைந் தால் அவரை நுழையவிடாதீர்கள். மறியல் போராட்டம் செய்யவேண்டும். ஆளுநர் தனது வரம்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும். கோப்புகளை திரும்ப அனுப்பும் செயலை ஆளுநர் நிறுத்தவேண்டும். பேஸ்புக், ட்விட்டரில் புகார் கூறுவதே ஆளுநரின் வேலை' என்று குற்றம்சாட்டினார். மேலும் 'அமைச் சர்களின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆளுநரை சந்திக்கக் கூடாது' என்று உத்தரவிட்டார். 'ஆளுநரை மாற்றவேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க உறுப்பினர் அன்பழகன் வலியுறுத்தினார். இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்னன் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்