சென்னை நமது எம்ஜிஆர் நாளிதழை விமர்சித்த அமைச்சர் ஜெயகுமாருக்கு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கடும் எதிர்ப்புக் காட்டியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் மத்திய அரசுக்கு எதிராகவும் மோடியை கடுமையாக விமர்சித்தும் வெளியாகி இருக்கும் கருத்துக்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஒரு பத்திரிகையின் கருத்து தான் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையானபிறகும் டி.டி.வி. தினகரனை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசை அவர் இயக்குவதாக கூறுவதும் தவறு என்றும் ஜெயக்குமார் கூறி யிருந்தார். இதற்கு டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளிவந்துள்ள கருத்துக்கள் அ.தி.மு.க.வின் கருத்துக்கள் இல்லை என்று கூறுவதற்கு ஜெயக்குமார் யார்? ஜெயக்குமார் கட்சி பதவிக்கு வந்த போதும், எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டபோதும், அமைச்சராக அறிவிக்கப்பட்ட போதும், நமது எம்.ஜி.ஆரில் தான் அவரது பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. இதனை ஜெயக்குமார் மறுப்பாரா? தினகரன் பற்றியும் ஜெயக்குமார் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதுவும் கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவே நீடிக்கிறார். துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் தற்போது சிறையில் இருந்து விடுதலையாகி கட்சி பணியை தொடங்க உள்ளார். கட்சியை அவர்தான் வழி நடத்தி செல்வார். அவரது தலைமையில் தான் அ.தி.மு.க.வினர் அணி வகுப்பார்கள். எங் களிடம் தற்போது வேறு எந்த திட்டமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெறும். ஆனால் கட்சியின் தலைமை பொறுப்பை தின கரனே ஏற்று நடத்துவார். இதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது டெல்லியில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். சென்னையில் மேலும் பல முன்னணி நிர்வாகிகளும், எம்.எல். ஏ.க்களும் சந்திக்க தயாராக உள்ளனர். டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.தி.மு.க. மேலும் வலுப்பெறும்." என்று கூறியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேலின் மன நிலையில்தான் அமைச்சர்கள் சிலரைத் தவிர எல்லோரும் தினகரன் ஆதரவில் இருக்கிறார்கள். அதனால் ஜெயக்குமார் போன்று தினகரனுக்கு எதிராகப் பேசிய அமைச்சர்கள் உதறலில் இருக்கிறார்கள். தினகரனை விமர்சித்த அமைச்சர்களை மற்றும் முடிவில் தினகரன் இருக்கிறார் என்றும், அதற்கான முன்னோட்டமே வெற்றிவேல் கண்டனம் என்றும் அதிமுகவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. சசிகலாவை தினகரன் சந்தித்த பிறகு அமைச்சரவை மாற்றம் வரும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்