அந்த அடிப்படையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் அதிகம் பேர் செல்கிறார்கள். இந்த நாடுகளின் பட்டியலில் தனித்த அடையாளம் கொண்ட ஒரு நாடு உண்டு. அது அயர்லாந்து. அயர்லாந்து, ஐரோப்பா கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு தீவு. ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் இதுதான். அரசியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் அயர்லாந்து இரு பிளவாக இருக்கிறது. அயர்லாந்தின் வடக்குப் பிரதேசத்தில் உள்ள பகுதி வட அயர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி UK-யின் ஒரு அங்கமாக இருக்கிறது. அயர்லாந்து ஐரோப்பியக் கூட்டமைப்பின் ஒரு தனி நாடாகச் செயல்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் டப்ளின்.