img
img

என்னை யாராலும் ஒதுக்க முடியாது
ஞாயிறு 04 ஜூன் 2017 15:43:21

img

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வைரவிழாக் கொண்டாட்ட நாளில் ஜாமீனில் விடுதலையாகி, திரும்பியிருக்கிறார் டி.டி.வி. தினகரன். அதாவது, அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர். தினகரனின் வருகையும், அவர் அளித்துள்ள பேட்டியும் ஓ.பன்னீர் செல்வத்தின் 'அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி' யை விட சசிகலா- தின கர னின் அணியாக கருதப்படும் அம்மா அணிக்கே சோதனையாக அமைந்திருக்கிறது. செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "மாண்புமிகு இதயதெய்வம் பொதுச்செயலாளர் (சசிகலா) அவர்களின் ஆணையை ஏற்று, அவர் வழிகாட்டுதல் படி செயல்படுவேன். 'நீங்கள் கட்சியில் இருந்து ஒதுங்க வேண்டும்' என்று அவர்கள் (அமைச்சர்கள்) கூறியதால் கட்சி நலனுக்காக ஒதுங்கிக் கொண்டேன். நான் ஒதுங் கியபின், கட்சி எந்த நலனும் பெற்றதாகத் தெரியவில்லை. கட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால்தான் கட்சியைக் காப்பாற்ற முடிவு செய்து வந்திருக்கிறேன்.இன்று மந்திரிகள்தான் சர்வ அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அனைத்து முடிவுகளையும் அவர்களே எடுக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள். கட்சியின் தலைமை அலுவலகத்தில் எங்கள் (சசிகலா- தினகரன்) பேனர்களை அகற்றி மிகப்பெரிய தவறைச் செய்து இருக்கிறார்கள். அதற்கெல்லாம் காலம் பதில்சொல்லும். அந்தத் தவறைச் செய்தவர்கள், தவறை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். யாரை வேண்டுமா னாலும் ஒதுக்கி வைத்துவிட்டு செயல்படலாம் என்று மந்திரிகள் நினைக்கிறார்கள். காலம் அதற்கு பதில் சொல்லும். நான் யாருக்கும் எதிர்ப்பாக இல்லை, என்னை எதிரியாக நினைப்பவர்களுக்கும் நான் எதிராக இல்லை. எனக்கு எதிராக யாரும் செயல்பட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று நம்புகிறேன்." என்று பேட்டியில், புயலைக் கிளப்பியிருக்கிறார் தினகரன். இதுநாள் வரையில் சசிகலா- தினகரன் ஆகியோரைக் கொண்டதாக அறியப்பட்டு வந்த 'அம்மா அணி' தான், இப்போது முதல்வர், மந்திரிகள் என தமிழக சட்டசபையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தினகரனின் இந்த பதிலடி தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு. க.வின் மூத்த மந்திரியான டி.ஜெயகுமார் ,"கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக டி.டி.வி. தினகரன் தான் தெரிவித்தார். இப்போது அவர் சொல்லியிருக்கும் பதில் குறித்து கட்சியின் வழிகாட்டுதல் குழுதான் முடிவை எடுக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். ஏறக் குறைய டி.ஜெயகுமாரின் கருத்தோடு பொருந்தும் அளவிலேயே மற்ற மந்திரிகளும் தங்கள் கருத்தை சொல்லத் தொடங்கியுள்ளனர். கட்சியின் முன் னாள் பொருளாளரும், மந்திரியுமான திண்டுக்கல் சீனிவாசன், " மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகம்தான் இதற்கு பதிலை சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார். டி.டி.வி. தினகரனின் பேட்டியும், அ.தி.மு.க. மந்திரிகளின் பதிலும் குறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறும்போது, "வழக்குகளில் சிக்கி சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் அடுத்தடுத்து சிறைச்சாலைக்குச் சென்றாலும், தினகரன் சிறைக்குச் சென்றது கட்சியைக் காப்பாற்றத்தான். அவர்கள் சிறைக்குப் போன பின்னர் அவர்களை சிறைச்சாலைக்குப் போய் பார்க்காமல் மந்திரிகள் தவிர்த்தனர். ஆட்சியில் சசிகலாவும், தினகரனும் தலையிடவில்லை என்று 'யாருக்கோ' காட்டுவதின் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிற சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டிருக்கிறது. பால்வளத்துறை மந்திரி ராஜேந்திரபாலாஜி எப்போது பேட்டியளித்தாலும், 'நாங்கள் யார் தலையீடும் இல்லாமல் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறோம்' என்றுதான் யாருக்கோ தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும் விதமாகக் கூறுகிறார். பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விட்டு வந்தபின் மந்திரிகளின் போக்கே மாறிவிட்டது. சசிகலா நடராஜனும், 'மந்திரிகள் சுதந்திரமாக பேசுவதும், செயல்படுவதும் மனநிறைவைத் தருகிறது' என்கிறார். மொத்தத்தில் இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக தினகரனை எதிரியாக பார்ப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போது அதே தினகரனே, சசிகலாவை இதய தெய்வம் என்று சொல்லத் தொடங்கி அரசியலில் புது அத்தியாயத்தை எழுத ஆரம்பித்து விட்டார். இனிமேல்தான் அண்ணனின் (தினகரன்) அரசியலைப் பார்க்கப் போகிறீர்கள் " என்கின்றனர். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் கே.பி.முனுசாமி, " சசிகலா குடும்பச் சண்டையில் தினகரன் தான் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேற்றப் பாதையில் வந்து கொண்டிருந்தார். சசிகலா, நடராஜன், பாஸ்கரன் என்று பல அணிகள் அங்கே உண்டு. தினகரன் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால், மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டு அதன் மூலம் சசிகலா குடும்ப முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வந்து உட்கார்ந் திருக்கிறார்" என்கிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img