நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு அவர், தமிழக அர சியல் சூழல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஒரே கருத்தாக்கத்தை நாடு முழுவதும் திணிக்க முயற்சி செய்கிறார்கள். இந்தியா பல்வேறு கலாசாரத்தைக் கொண்ட நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த மக்களும் தனக்கென உணவு, கலாசாரத்தைக் கொண்டு உள்ளனர். தங்களது மொழியில் சிந்திக் கின்றனர். தமிழர்கள் தமிழ் மொழியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். அதுதான் இந்தியாவின் பலம். அது இந்தியாவை பலவீனப்படுத்தாது. எதிர்க் கட்சிகள் ஒருமித்த கருத்துகளை கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸை வீழ்த்துவோம். ஒற்றைக் கலாச் சாரம் சார்ந்த பா.ஜ.கவின் செயல்பாடுகளை மக்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக சண்டையிடப் போகிறோம். பா.ஜ.க தான் தமிழ்நாடு அரசை இயக்குகிறது. காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் யாரும் இந்தியாவில் இருக்கக் கூடாது என்று பா.ஜ.க விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு எதிராக யாரும் கருத்துகளை வெளிப் படுத்தக் கூடாது என்று பா.ஜ.க நினைக்கிறது' என்று குற்றம் சாட்டினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்