சென்னை ரஜினி அரசியலில் நுழைகிறாரா, அல்லது அரசியலில் அவரின் நுழைவைத் தமிழகம் எதிர்பார்க்கிறதா, அல்லது அவர் அரசியலுக்கு வருவதற்கு நிர்ப்பந் திக்கப்படுகிறாரா, அல்லது இன்றைய சூழலில் ரஜினி போன்ற ஒரு தலைவரின் சேவை தமிழகத்திற்குத் தேவையானதா என பல்வேறு கேள்விகள் எழுந் திருக்கின்றன. சாதாரணமாக இதுவரை அரசியலில் நழுவல் போக்கைக் கடைப்பிடித்த ரஜினி அண்மையில் வெளிப்படையான அரசியல் விமர்சனங்களை அவசரமாக வெளியிட்டதன் பின்னணியில் அவருக்கென மிகப்பெரும் பலமான சக்தி ஒன்று இருக்கவேண்டும் என்பது நிஜம். அந்த வகையில் மோடி அரசின் தமிழகம் மீதான நெருக்குதல், ரஜினியுடனான சந்திப்பு, அதிமுகவின் பிளவை தீர்க்காமல் ரசித்துக் கொள்கின்ற போக்கு, மத்திய அமைச்சர்கள் மூலம் தமிழகத்திற்கு விடப்படும் மிரட்டல்கள் என பலதரப்பட்ட விடாப்பிடியான பிடிவாதங்களில் இருந்து தெளிவாகப் புரிகிறது தமிழகத்தை மத்திய அரசு தன் கைக்குள் வைத்திருக்க எண்ணுகிறது என்பது. இந்திய அளவில் மோடி அரசின் ஆளுகைக்குள் பெரும்பாலான மாநிலங்கள் வீழ்ந்த போதும் கர்நாடகா மற்றும் தமிழ் நாடு இரண்டையும் அடைவதில் பெருத்த சிக்கல் இருக்கிறது. அண்மையில் உத்தரப் பிரதேச வெற்றிக்குப் பின்னர் தனிப்பெரும் தலைவராக உருவாகியிருக்கும் மோடி, கர்நாடகாவை எப் படியாவது தக்கவைத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டை பிடிக்குள் கொண்டுவருவதில் கடுமையான போராட்டம் உள்ளது என்பதை உணர்ந்து களத்தில் இறங்கியிருக்கிறார். இதுவரை தமிழகத்தை நெருங்க முடியாத இறுக்கமான அதிமுக ஆட்சியில் இன்றுள்ள அதிமுக பிளவு அதற்கு வழிவகுத்தும் விட்டது. எனினும் தமிழகத்தில் பாஜக வுக்கு இருக்கும் மிகக் குறைந்த செல்வாக்கில் ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமற்றது என்றாலும் கட்சியை வளர்த்துக்கொள்ள இதைவிட ஒரு சந்தர்ப்பம் வாய்க்காது என்பதை தெளிவாகப் புரிந்து அதற்கான புதிய யுக்தியைக் கையாள நினைத்தபோது சிக்கியவர்தான் இந்த ரஜினி. மோடி மற்றும் அமித்ஷா இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினியை பாஜகவில் இணையும் முயற்சியில் இறங்கினார்கள். ரஜினி பிடி கொடுக் கவில்லை. அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் வீட்டுக்கே சென்று மோடி அழைப்பு விடுத்தார். ரஜினி சில காரணங்களைச் சொல்லி பிடி கொடுக்காமல் பேசியிருந்தார். அதன்பின் துக்ளக் ஆண்டு விழாவில் சோ வின் இரங்கலை ரஜினியை வைத்துப் பேசவைத்தது பாஜக. அப்போது வீடி யோ கான்பரன்ஸ் மூலம் மோடியும் பேசினார். தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவும் இந்நிலையில் சோ இல்லாதது வேதனை அளிக்கிறது என ரஜினி சொல்ல அதற்கு பலத்த கண்டனங்கள் கிளம்ப பாஜக அதை ரசிக்க, பல பத்திரிகைகளில் ரஜினியும் பாஜகவைச் சார்ந்தவர் எனும் தோரணையை திட் டமிட்டு மோடி அரசு அரங்கேற்றியது. இதனிடையே டில்லித் தலைமை இருமுறை ரஜினியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெயலலிதா மறைந்துவிட்டார், கலைஞருக்கு வய தாகிவிட்டது, இந்நிலையில் மக்கள் நலன்கருதி நீங்கள் அரசியலில் இறங்க வேண்டும், அதற்கான அடித்தளத்தை நாங்கள் வலுவாக்கித் தருகிறோம் என அழைப்பு விடுத்திருக்கிறது.மேலும் மோடி உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார், பிரதமர் வேட்பாளர் என்றுகூடப் பார்க்காமல் உங்கள் வீட் டுக்கு வந்தார், பண முடக்க அறிவிப்பின்போது நீங்கள்தான் முதலில் ஆதரித்தீர்கள், உங்கள் ஆன்மிக வாழ்க்கை பாஜகவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என ரஜினியின் மூளை சலவை செய்யப்பட்டது. இது தொடர்பாக ரஜினி தமிழகத்தில் தன் நெருக்கமானவர்களிடம் பேசியபோது பொறுமையாக இருங்கள், தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. உங்கள் செல்வாக்கால் அதிக வெற்றி ஏற்படலாம், ஆனால் பாஜகவுக்கு எதிராக எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் எனவும் அறிவுறுத் தியுள்ளனர். எதற்குமே ரஜினி பிடிகொடுக்காத போது இறுதியாக பாஜக வகுத்த திட்டம் விசித்திரமானது. அதாவது ரஜினியை களத்தில் இறக்காமல் அவரை வைத்து பெரும் அமைப்பை உருவாக்குவது. அதன் பின்னர் ரஜினியின் ரசிகர் மன்றங்களை அதனுடன் ஒன்றிணைப்பது. ரஜினியின் ஆன்மிக சிந்தனைகள் ஊடாக கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவில் இணைப்பது என திட்டம் வகுத்துக் கொடுத்தது மோடி அரசு. மோடியுடன் ரஜினியும் இணைந்த ஒரு போட்டோ மட்டுமே போதும் தமிழகத்தை வெல்வதற்கு என நம்புகிறது பாஜக. அதனால்தான் பாஜகவின் கங்கை அமரனும் ரஜினிகாந்தும் இணைந்த படத்தைப் பிரமாண்டமாக வெளியிட்டது பாஜக.எதற்கும் பிடிகொடுக்காதிருந்த ரஜினி, சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்தபோது போருக்குத் தயாராகுங்கள் என உரைத்தது, நிச்சயம் பாஜகவின் திட்டத்தின்படிதானா என்பதை வரும் நாட்கள்தான் பதில் சொல்லவேண்டும்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்