img
img

இன்று இவருக்கு அகவை 94.
சனி 03 ஜூன் 2017 16:00:53

img

மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர், பேச்சாளர், கலைஞர், கவிஞர், அரசியல்வாதி எனும் பன்முக சிறப்பைக் கொண்டவர் கலைஞர் மு. கருணாநிதி, இன்று தனது 94 ஆவது பிறந்த நாள் விழாவை காண்கிறார். அதே வேளையில் அரசியலில் ஈடுபட்டு 60 ஆண்டுகளை யொட்டி வைர விழாவையும் கொண்டாடு கிறார். அற்புதமான கற்பனை சக்தி மூலம் வசனங்கள் எழுதி மக்களைக் கவர்ந்தவர் அவர். தி.மு.கழக ஆட்சியில் புரட்சிகரமான திட்டங்களை நிறை வேற்றியவர். தேசிய அளவில் அரசியல் மாற்றங்கள் வருவதற்குக் காரணமாக விளங்கியவர் கலைஞர். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். அவர் திராவிட முன் னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 இல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ் நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமை யான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர் களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்தியிருக்கிறார். அன்போடு மக்களால் ‘கலைஞர்’ என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக் தியாக விளங்குகிறார். தமிழ் இலக் கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கலைஞர் அவர்கள் சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற் காகவும் போராடினார். கலைஞர் அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம் பதிகளின் மகனாகப் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் இரு வரும் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர். வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப் பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாத போதிலும், அவர் தமிழ் இலக்கியத் தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர், தமிழ் திரையுலகில் கதை,வசனம் எழுதுபவராக இருந்தார். அவருடைய திரை வசனங் கள் மூலம், அர்த்த முள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார். அவரது கதைகள் அனைத்தும் ‘விதவை மறுமணம்’, ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’, ‘மத பாசாங் குத்தனத்தை ஒழித்தல்’, ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம்’, ‘சாதி ஒழிப்பு’ போன்ற வற்றை சார்ந்தே இருக்கும். பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பரா சக்தியில்’ பிரதிபலித்தார். பல சர்ச்சைகள் இருந் தாலும், இப்படம் பரவலான விளம்பரம் பெற்று, மாநிலத்திலுள்ள அனைத்து பார்வையாளர்களா லும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ ரின் திரைக் கதையிலுள்ள மரபுசாரா கருப்பொருள் களே, அவரை அக்காலத்தில் மிகவும் பிரபல மாக்கியது. திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுது வதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதை கள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம், நாடகங் கள், கட் டுரைகள், சிறுகதைகள், போன்றவற் றையும் எழுதியிருக் கிறார். அவர் ஒரு கலாரசி கனாக இருந் ததால், புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளு வருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்டடக் கலைக் குவிய லான அற்புதமான கற்பனை சக்தி மூலம் வசனங் கள் எழுதி மக்களைக் கவர்ந்தார். தனது சொந்த தலையங்க பத்திரிகையை உருவாக்கினார். 1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, அவர் தனது பத்திரிகையான முரசொலியை தொடங்கினார். அப்பொழுது முதல், இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராக வும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத் துத்திறன் கொண்ட கலைஞர் அவர்கள், தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர் கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கலைஞர் அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957 இல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலி ருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 இல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார். பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரா னார். 1967 இல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கலைஞர் அவர்கள், ஒரு சக்தி வாய்ந்த செல்வாக்குள்ள நிலைக்கு உயர்ந்தார். 1967 இல் தமிழ்நாடு முதலமைச்ச ராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார். சிந்தனைச் சுரங்கம் கண்டவர் பெரியார். அதனைக் கலையரங்கம் ஆக் கினார் அண்ணா. பகுத்தறிவு இயக்கம் தந்தார் பெரியார். அதனைப் படித்து இயக்கமாக்கினார் அண்ணா. அண்ணா எழுத்தாலும், பேச்சாலும் தமிழ்ச் சமுதாயத்தை எழுச்சியுறச் செய்தார். படித்த இளைஞர்கள் நெஞ் சைக் கிளர்ந்தார். பெரியார் மக்கள் மொழி யில் பேசினார். அண்ணா மழலையர் மொழியில் பேசினார். அம் மொழியை கற்ற கலைஞரிடம் வண்டுகளாய் மாணவர்களும் இளைஞர்களும் அணி திரண்டனர். பகுத்தறிவு இயக்கத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்த காலத்தில் கலைஞர் எழுதிக்குவித்த எழுத்துக்களே அவருக்கு இமயப் புகழை ஈட்டித் தந்துள்ளன. சிறுகதை, நாடகம், நாவல், ஓரங்க நாடகம், கடிதங்கள், கவிதைகள் எனும் பல்வேறு வழிகள் மூலம் தமிழ்ச் சமுதாயத்தைச் செதுக்கினார் கலைஞர். தனது எழுத்தால், பேச்சால், நாடகப் படைப்பால், திரைப்பட ஊடகத்தால், நடிப்பால் தன்னைப் பயனுறப் பரிமளிக்கச் செய்தவர் கலைஞர். ‘உயர்ந்த கோபு ரங்கள் தாழ்ந்த குடிசை, கோயில் வேண்டாமென்று சொல்லவில்லை. அது கொடியவனின் கூடாரமாகிவிடக் கூடாது எனும் கலைஞரின் வரிகளை ஒலிக்காத கலைஞர்களே இல்லை எனலாம். பகுத்தறிவுப் பணி, கலைப் பணி, எழுத்துப்பணி, ஆட்சிப் பணி, மொழிப் பணி, பண்பாட்டுப்பணி, தேசியப் பணி எனக் கலைஞர் ஆற்றி வரும் பணிகள் வரலாற் றின் எல்லாப் பக் கங்களிலும் எழி லூட்டி வருகின்றன. தமிழக வரலாற்றில் பெரியார் வேர் என்றால் அண்ணா கிளை. கலைஞர் கனி. பெரியார் கடைக்கால் என்றால் அண்ணா முதற்தளம், கலைஞர் அதன் கலையரங்கம். தமிழகத்தில் அண்ணா தலைமுறைக்கான தலை வர் கலைஞர் அவர்கள் மட்டுமே. இன்று அனைத்துத் தமிழக மக்களின் இதயத் தலைவராகியுள்ளார். கலைஞரின் வளர்ச்சிப் பரிமாணம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் மகத்தான வரலாற்றுச் சக்தியாக மாறி உள்ளது. பெரியார், அண்ணா இவர்களின் மறைவிற்குப் பின்னால், தமிழினத்தையே தன் கையில் ஏந்திக் கொண்டார் கலைஞர். தன்னைச் செதுக்கிச் செதுக்கி மக் கள் மன் றத்திலே சாதனைத் தேரில் அமர்ந்து வருகிறார் - தமிழகத்தில் எவரும் எந்தப் பயனையும் நான் துய்க்கவில்லை என்று கலைஞர் ஆட்சியில் சொல்ல முடியாத வண்ணம், உலையில் ஒரு ரூபாய் உணவாய், கூடத்தில் அமர்ந்தால் தொலைக்காட்சியாய் அண்ணார்ந்து பார்த்தால் காங்கிரீட், கூரை யாக்கி இருக்கிறார். எல்லாத் தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் பயனுறும் வண்ணம் கலைஞரின் ஆட்சிப் பயணம் அமைந்து இருந்தது. செம்மொழி மாநாட்டிலிருந்து, மண்ணையும், மரபையும் விட்டுவிடாமல், பகுத்தறிவுப் பணியாற்றி வந்துள்ளார். தன் வழிகாட்டலினால் தூங்காத தமி ழகத்தை எழுப்பிய மாபெரும் தமிழ் கடலுக்கு இன்று வயது 94. வாழ்த்துகள் பல.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img