இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸார், ஏப்ரல் மாதம் கைதுசெய்தனர். இதையடுத்து மே 1ஆம் தேதி, திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கு மேல் சிறையிலிருந்த தினகரனுக்கு, கடந்த 1ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்றிரவு சிறையி லிருந்து தினகரன் வெளியேவந்தார். இன்று காலை, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "மீண்டும் எனது கட்சிப் பணி யைத் தொடர்வேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு, பொதுச்செயலாளருக்கு மட் டுமே அதிகாரம் உள்ளது" என்று கூறினார். கைதுசெய்வதற்கு முன், கட்சியை விட்டு விலகிவிட்டேன் என்று கூறியிருந்த நிலையில், தினகரனின் இந்த அதிரடி அறிவிப்பு, முதல்வர் பழனிசாமி அணியை அதிரவைத்துள்ளது. இதைத் தொடர்ந்து,"தினகரனை அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டோம்" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி யிருந்தார். "தினகரன் கட்சியில் நீடிப்பதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்" என்று அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் எஸ். பி.வேலுமணி தெரிவித்திருந்தனர். ஆனால், அமைச்சர் சீனிவாசன், "கட்சிப் பணியைத் தொடர டி.டி.வி-க்கு உரிமை உள்ளது" என்று கூறினார். இப்படி பல்வேறு கருத்துகள் உலாவிவரும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அ.தி.மு.க அம்மா அணி தலைமையிடத்திலிருந்து ஒரு முக்கிய உத்தரவு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் தினகரனை, யாரும் சென்று சந்திக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம். ஆனாலும், தினகரனின் தீவிர விசுவாசிகள் பலரும், அவரை வரவேற்கத் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்