மாட்டிறைச்சித் தடை விவகாரத்தில், ஒவ்வொரு நாளும் பல தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதில், தற்போது குஜராத் இளைஞர் காங் கிரஸாரும் இணைந்துள்ளனர். மாடுகளை உணவாக உண்ண, விற்பனை செய்யக்கூடாது. மேலும், மாட்டிறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்துள்ளது மத்திய அரசு. இதைப் பலர் எதிர்த்தும், ஆதரித்தும் கருத்து வெளியிட்டுவந்தனர். சமீபத்தில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், ’பசுவைக் கொன்றால், ஆயுள் தண்டனை விதிக்க வேண்டுமென்றும் பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்றும்’ கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது குஜராத் இளைஞர் காங்கிரஸார், ‘பிரதமர் மோடி பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். இதற்காக நாங்கள் ஒரு இயக்கமே உருவாக்கவுள்ளோம். அதில், பசுவுக்கு ஆதரவாக இருக்கும் அத்தனை பேரும் வந்து இணைய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பசுக்களைவைத்து அரசியல் செய்ய வேண்டாம். தொழிற்சாலைகளுக்காக ஏக்கர் கணக்கில் பசுமை நிலங்களை அளித்த பா.ஜ.க அரசுக்கு, பசுவைக் காக்க அந்த நிலங்களில் விளையும் புல் வேண்டுமெனத் தெரியவில்லை. இன்னும் பல இடங்களில் சட்ட விரோதமாக மாட்டிறைச்சி விற்பனை நடைபெற்றுதான் வருகின்றன. இதனால், அனைத்துத் தரப்பினரும் பசுவை வைத்து அரசியல் செய்வதை விடுத்து, பசுவைக் காக்க ஒன்றிணைவோம்’ என்று கூறியுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்