வீட்டின் மதிப்பை காட்டும் வகையிலான டிவி, கணினி, பிர்ட்ஜ் ஆகியவற்றை எங்கெங்கு வைக்கப் போகிறோம் என்பதை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் மின் இணைப்பை அமைக்க வேண்டும். மின் இணைப்புகளை முதலிலேயே வைப்பது பற்றி திட்டமிடவில்லை எனில் நமக்கு தான் நஷ்டம். ஏனெனில் வீடு கட்டி முடித்தபின், மாற்றியமைக்க முயன்றால் கட்டிய சுவர்களை இடிக்க வேண்டும். அப்படி செய்தால் கட்டிடத்தின் வலிமையும் பாதிக்கும். வீட்டின் நேர்த்தியான அழகும் குறையும். கைக்கு எட்டும் தூரத்தில் சுவிட்சு போர்டு இல்லையென்றால் மிகவும் சிரமம். அதனை ஏதாவது ஒரு மூலையில் பொருத்தி இருப்பதால் என்ன பிரயோஜனம்? அயன்பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு மேஜைக்கு பக்கத்தில் சுவிட்சுகளை அமைப்பது சுலபமாக இருக்கும். அவ்வாறு அமைக்கப்படும் சுவிட்சுகள், பிளக் பாயின்ட் சாக்கெட்கள் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே தான், ஒவ்வொரு அறைக்கும் மின் இணைப்பு வசதியை எப்படி அமைக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்வதே புத்திசாலித்தனமான நடவடிக்கை என்பர்.
உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”
மேலும்ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்
மேலும்உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த
மேலும்குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்
மேலும்அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்
மேலும்