பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் இருக்கிறார். இவர் நேற்று நிகழ்ச்சி முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டுக்குக் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. போனில் ஒரு கரகரப்பான ஆண் எதிர்முனையில் பேசினார். ”ஏய் தமிழிசை எங்கிருக்கிறாய்.. மோடி எங்கிருக்கிறார்.. அவரது அட்ரஸைச் சொல்லு..” என்று சொல்லி போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார் அந்த மர்ம நபர். இதுகுறித்து தமிழிசை செளந்தரராஜன் கட்சி நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்தார். வீட்டில் உள்ளவர்களிடமும் விவரத்தைக் கூறினார். அப்போது அவர்கள் போலீஸில் புகார் கொடுக்கும்படி தமிழிசையிடம் கூறியுள்ளனர். அதன்படி தமி ழிசை தரப்பு வழக்கறிஞர் தங்கமணி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் தமிழிசைக்கு வந்த மிரட்டல் போன் எண் ணையும் குறிப்பிட்டிருந்தார். அந்த நம்பருக்குப் போலீஸார் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ட்ரூ காலர் மூலம் அந்த போன் நம் பரை ட்ரேஸ் அவுட் செய்தபோது மகாராஷ்டிர மாநிலம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார். போனில் பேசிய மர்ம நபரின் குரல்பதிவும் தமிழிசையிடம் இருப்பதாகப் போலீ ஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலும் மிரட்டல்விடுத்த மர்ம நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர். தமிழிசைக்கு இன்று 56வது பிறந்தநாள். மிரட்டல் குறித்து எந்தப் பதற்றமும் இல்லாமல் அவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இன்று கலந்துகொண்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்