'மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் பரபரப்பான முடிவுக்குப் பின்னால், மத்திய அமைச்சர் மேனகா காந்திக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்குத் தடை விதித்தும் கால்நடைகளை விற்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், மாடுகள் விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதித்ததற்கான காரணங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்பட்டு, நேபாளம் போன்ற நாடுகளில் பலியிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று 'விலங்குகளுக்காக மக்கள் (People for Animal)' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கௌரி மாலேகி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுதொடர்பாக, தகுந்த வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பின் காரணமாக, கால்நடைகள் விற்பனைசெய்வதற்குத் தடை விதித்ததாக மத்திய அரசு தெரிவித் துள்ளது. PFA எனப்படும் 'விலங்குகளுக்காக மக்கள்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தொடங்கினார். எனவே, மத்திய அரசின் இந்தத் தடை உத்தரவுக்குப் பின்னால், மேனகா காந்திக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்