ஐஓசி அலுவலகம்மீது கல்வீசித் தாக்கிய வழக்கில் கைதான திருமுருகன் காந்தி உட்பட மூன்று பேருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூன் 14ஆம் தேதி வரை காவலை நீட்டித்துள்ளது.சென்னை மெரினாவில் தடையை மீறி நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, மே 29ஆம் தேதி நான்குபேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஐஓசி அலுவலகம்மீது கல்வீசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் ஆகியோரைக் காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் மூன்று பேரையும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, தன்மீது பொய்வழக்குப் பதியப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி புகார் கூறினார். பின்னர், திருமுருகன் உள்ளிட்ட மூன்று பேரின் காவலை ஜூன் 14ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து, திருமுருகன் உட்பட மூன்று பேரையும் காவல்துறையினர் வேனில் ஏற்றினர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, பா.ஜ.க அரசின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிரான விரோதப்போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். நினைவேந்தல் நிகழ்ச்சி உள்ளிட்டவைக்கு அரசு அனுமதி தரவேண்டும்" என்று கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்