நேதாஜி மரணம்குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் வெளியிடப்பட்ட பதிலுக்கு, நேதாஜி குடும்பத்தினர் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங் களையும் தெரிவித்துள்ளனர்.சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி, விமான விபத்தில் மறைந்துவிட்டார் எனக் கூறப்பட்டாலும், அவரது மரணத்திலுள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. விடை தெரியாத இந்தச் சர்ச்சைக்கு, அவ்வப்போது வலு சேர்ப்பது போல ரகசிய ஆவணங்களும் குறிப்புகளும் வெளியாகிய வண்ணம் இருந்தன. இந்நிலையில் ஆர்வலர் ஒருவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், கடந்த மாதம் கேள்வி ஒன்றை எழுப்பியுள் ளார். அதற்கு ஆர்.டி.ஐ., ‘சுபாஷ் சந்திர போஸ் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி நடந்த ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார்’ என அரசின் கோப்புகளின் அடிப்படையில் தெரிவிப்பதாகப் பதிலளித்துள்ளது. அரசின் இந்தப் பதிலுக்கு சமூக ஆர்வலர்களும் நேதாஜியின் குடும்பத்தினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். நேதாஜி மரணம்குறித்து, எந்தவொரு தகவலும் இதுவரை நிரூபிக்க முடியாத நிலையில்... அரசின் அலட்சியமான பதில், கடும் கண்டனத்துக்குரியது என நேதாஜியின் குடும்பத் தினருள் ஒருவரும் பா.ஜ.க-வின் தலைவருமான சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்