இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கியுள்ள டி.டி.வி தினகரனின் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பினை நாளை ஒத்திவைப்பதாக டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரு அணிகளாக அதிமுக உடைந்ததால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப் பட்டது. இதையடுத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற அப்போதைய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை டெல்லி போலீஸ் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை டெல்லி ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டெல்லி போலீஸ் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் அளிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரியின் தலைமையிலான அமர்வு, லஞ்சம் கொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என முன்னர் அறிவித்திருந்தது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்