கோவை இராமநாதபுரத்திலுள்ள பிரபல குடல் சிகிச்சைக்கான, ஜெம் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று காலை 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஜெம் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள யு.பி.எஸ். அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மருத்துவக் கழிவுகளில் தீ பரவி பற்றி எரிந்ததால் நோயாளிகள் பதற்றத்துக்குள்ளானார்கள். முதல் தளத்தில் தீ பரவி கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. முதல் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது. அங்கு 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந் தார்கள். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் மருத்து வமனையின் முதல் தளத்திலிருந்த கண்ணாடிகளை உடைத்து, காற்றோட்ட வசதியை ஏற்படுத்தி புகையை வெளியேற்றினர். தீ விபத்து காரணமாக ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் மருத்துவமனை வளாகம் முன்பாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்துப் பேசிய மருத்துவமனை தலைவர் டாக்டர் .பழனிவேல், “மருத்துவமனையில் தீ பற்றியவுடன் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நோயாளிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்