தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்துள்ளார். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட் டினார். அப்போது, டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிடுவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமரைச் சந்திக்க தி.மு.க தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இதுநாள் வரை மு.க.ஸ்டாலினை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினரைச் சந்தித்து பிரதமர் பேசினார். இந்தச் சந்திப்பு, கடும் விவாதப்பொருளாக மாறியது. இதையடுத்து, பிரதமரையும் மத்திய அரசையும் மு.க.ஸ்டாலின் கடுமையாகவிமர்சித்துவருகிறார். இந்த விமர்சனம்குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்துள்ளார். "ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தினால், பிரதமரைச் சந்திக்க நேரம் வாங்கித்தருகிறேன். பாரதிய ஜனதாவுடன் மோதுவது, பாறையுடன் மோதுவதற்குச் சமம்; திருமாவளவன், சீமான் கலவரப் புத்தியுடன் இருக்கின்றனர்" என்று பதிவிட் டுள்ளார். இதனிடையே, நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கால்நடைகளைக் காப்பாற்றும் பிரச்னையை மதத்துடன் ஒப்பீடு செய்யவேண்டாம். விவசாயிகளைக் காப்பாற்றவே பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் மிக வேகமாக பா.ஜ.க முன்னேறி வருகிறது. கருணாநிதி அரசியலில் இல்லாத காரணத்தால், பல புதிய போராட்டங்கள் நடைபெறுகின்றன" என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்