பெங்களூருவில் உள்ள வர்தூர் ஏரியில் அதிகளவிலான கழிவு நீரில் ரசாயனம் கலந்ததால் திடீரென்று நச்சுத்தன்மை மிக்க நுரைகள் சாலை முழுவதும் பொங்கியது. பெங்களூரு அதிவேகமாக நகரமையமாகி வருகிறது. வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. இதன் விளைவாக கழிவு நீர் வெளியேற்றமும் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளி யேறுகிறது. இதில் பெரும்பாலான கழிவு நீர், சாக்கடைகள் மூலமாக பெங்களூருவின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வர்தூர் ஏரியில்தான் கலக்கிறது. இந்த ஏரியில் கழிவுநீரின் அளவு அதிகரிக்கும் போதெல்லாம் ஏரியில் ஆங்காங்கே நுரை மலைபோல குவிந்துவிடும். அந்த நுரைகள் அருகிலுள்ள சாலை களில் பறக்கும். வாகன ஓட்டிகள் இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இன்று காலையும் கழிவுநீர் அதிகரித்ததால் வாகன ஓட்டிகளின் முகங் களில் நுரைகளை பறக்கவிட்டுள்ளது வர்தூர் ஏரி. இந்த நுரைகளில் உடலை பாதிக்கும் நச்சுக்கள் கலந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித் துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்