பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2017-ம் ஆண்டு மே 26-ம் தேதியுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்முயற்சிகள் மற்றும் திட்டப்பணிகளை விளக்கும் வகையில் நாடெங்கும் கண்காட்சிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சியில் அரசின் திட்டங்களும் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் தெளிவுபடுத்த இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 12 இடங்கள் உள்பட நாடெங்கும் 300 இடங்களில் இந்த கண்காட்சிகள் நடக்கின்றன. கண்காட்சியை வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12 மணி வாக்கில் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பார்கள். அதற்குப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த 3 ஆண்டுகளில் இடம்பெற்ற முன்னேற்றங்கள், சாதனைகள் இடம்பெறும். மக்கள் தங்கள் கருத்துகளை பிரதமருக்கு தெரிவித்தல். தனி நபர்களுக்கு தேவையான திட்டங்கள் பற்றிய விபரங்களை கணினி மூலம் பெறலாம், வினாடி வினா, பிர தமருடன் செல்பி, பல்வேறு தலைப்புகளில் நிபுணர்களின் வழிகாட்டுதல், நேயர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், நாளைய செயலி தரவிறக்கம், குலுக்கல் பரிசு என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிறநகரங்களில் கண்காட்சி ஜூன் 9-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்