தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்திற்கு, முதன்முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் காலடி வைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.இந்நிலையில், வைர விழா காணும் கருணாநிதிக்கு, நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கருணாநிதியின் வசனம், நடிகர்களுக்கு கேட் பாஸ் போன்றது. அவரின் வசனங்களை பேசி விட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார். கலைஞரின் வசனத்தை, சிவாஜியின் குரலில் பேசுவதுதான், நடிகர்களுக்கான தொடக்கப்பள்ளி போன்றது. அதை சிறு வயதில் மழலை மாறாமல் நான் சொல்வேன். தசாவதாரம் படம் பார்த்துவிட்டு, அவர் என் கன்னத்தைக் கிள்ளினார். அவருக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தது.என்னுடைய தமிழ் ஆசானும் அவர்தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் அளவுக்கு கருணாநிதி எனக்கு நெருக்கம் இல்லை. நான் வைரவிழாவை முன்னிட்டு மட்டும், கருணாநிதிக்கு வாழ்த்து சொல்ல வில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே, ஒரு நிகழ்ச்சியில் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் என்று நான் சொன்னேன். அந்த நிகழ்ச்சி முடிந்த மறுநாள், எம்.ஜி.ஆர் என்னை பாராட்டினார். கருணாநிதி மூத்த அரசியல்வாதி மட்டுமல்ல, நல்ல தமிழ் அறிஞ ரும் கூட. சிறந்த திரைக்கதை ஆசிரியர், வசனம் எழுதக் கூடியவர் கருணாநிதி. அரசியல் கடந்து, அவருடன் நான் பழகி வருகிறேன். அது என் கலை உலகிற்கு தேவையில்லை. ஆனால், என் உலகிற்கு தேவையானது. வாழ்த்து சொல்ல வயது தேவையில்லை, மனம் இருந்தால் போதும். அது எனக்கு சிறுவயது முதல் நிறைய இருக்கிறது. வாழ்க கலை" என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்