(சாணக்கியன்) நடிகர் ரஜினியை வைத்து தமிழகம் இரண்டாக பிளவுபட்டு விடுமோ என்ற அச்சம்தான் இன்றைய நடப்பு அரசியல் நிலைமை. சினிமா ஹீரோக்களை நிஜ கதாநாயகர்களாக நினைத்து அவர்களை பயபக்தியாக பூஜித்து அவர்களுக்கு சிலை வைத்து, அவர்கள் உருவங்களுக்கு பால் அபிஷேகம் செய்து, அவர்களுக்காக மொட்டை அடித்து, தற்கொலைகள் செய்து என வேறுபட்ட பார்வையில், தமிழகம் சினிமாவின் கால்களில் சுருண்டு கிடக்கிறது. அரசியலை சினிமாவாக்கி, சினிமாவை அரசியலாக்கி, சினிமாக்காரர்களை அரசியல் வாதிகளாக்கி, அரசியல்வாதிகளை சினிமா பாணியில் அரசியல் செய்யவைத்து அழகு பார்க்கும் தமிழகத்தின் தலை விதியை மாற்றுவது என்பது கடவுளுக்கே வெளிச்சம். படித்த, அரசியல் அறிவாற் றலுடைய, பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த, தொடர்ச் சியாக மக்கள் சேவை புரிந்த, சமூகத்தின்மீது அக்கறை கொள்ளக் கூடிய, அடக்கு முறைகளிலும் வன்முறை களிலும் வீதியில் இறங்கிப் போராடக்கூடிய, முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒருவரை தங்கள் தலைவராக தேர்ந்தெ டுப்பதில் எப்போதும் தமிழக மக்கள் தவறிவிடுகின்றனர். ஏனெனில், அரசியல் நுழைவிற்கும், முதல்வர் பதவிக்கும், மக்களை ஆள்வதற்கும் அடிப்படைத் தகுதியாக திரைப்படத்தில் நடித்திருந்தால் போதும் என்ற நிலைப்பாடு இருப்பதனால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் இதுவரை அரசியலில் நிலைத்திருக்கும் சரத்குமார், விஜயகாந்த், குஷ்பு என சினிமாப் பட்டாளமே மக்களை ஆளத்துடிக்கின்றது. இது தொடர்ந்தால் ரஜினி மட்டுமல்ல நாளை விஷாலுக்கு கூட முதல்வர் ஆகும் கனவு ஏன் பிறக்காது. அதனால்தான் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பினால் உடனடியாக களத்தில் குதிக்க துடித்தனர் மீனா, நமீதா போன்ற சினிமா நடிகைகள். மொத்தத்தில் தமிழக மக்களை சினிமாக்காரர்கள் அடிமைப் படுத்த அல்லது ஆட்கொள்ள நினைக்கின்றனர் என்ற அச்சம் நிலவுகிறது. அரசியலில் சினிமாவின் அதிகப்படியான தலையீடு உலகில் எந்தவொரு நாட்டிலும் தமிழகத்தைப் போல் இதுவரை இருந்ததில்லை. தமிழக அரசியலில் அண்மையக் காலங்களில் நடந்த அரசியல் அசிங்கமும், அநாகரிக மும் கூட இதுவரை உலகில் எங்கும் நடந்ததில்லை. எம்ஜிஆர் தமிழரில்லை, ஜெயலலிதா தமிழரில்லை. அவர்கள் ஆண்ட போது கேள்வி கேட்க துணிவில்லாத வர்கள் ஏன் ரஜினியை மட்டும் இப்படி வறுத் தெடுக்கிறீர்கள் என கேட்பது நியாயம்தான். இவர்களெல்லாம் ஆண்ட தமிழகம் இன்று என்ன இந்தியாவின் முதல்நிலை மாநிலமாகவா இருக்கிறது என்ற நியாயமான கேள்விக்கும் பதில் வேண்டும். மிகப்பெரும் பட்ஜெட்டை கொண்டு வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்களை விலை நிர்ணயம் செய்யமுடியாமல் எதையாவது இழந்தாவது, என்ன விலைகொடுத்தாவது அதைப் பார்த்துவிடவேண்டும் என அடிபட்டு முந்திக்கொண்டு முதல்நாளிலேயே பார்த்து வெற்றிக்கனியைப் பெற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு தீவிர ரசிகனுக்கும்கூட பிரபலங்களின் உண்மை முகம் புரிய மறுக்கிறது. தலைவா என உரக்கக் கத்தி உண்மையாக இதயத்தில் நேசிக் கும் அந்த ரசிகனை, ரசிகனாகப் பார்க்காமல் வரும்காலத்தில் ஒரு வாக்காளனாகப் பார்க்கின்ற சினிமா அரசியலை பாவம் அந்த ரசிகனுக்குப் புரியவா போகிறது. யாரும் அரசியலுக்கு வருவதென்பது ஜனநாயகம் என்று வைத்துக் கொள்ளலாம். அதை ஏற்றுக்கொள்ளவும் நிரூபித்துக் கொள்ளவும்கூட ஆயிரம் கார ணங்கள் உண்டு. ஆனால் ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என கேள்வி கேட் கவும் ஆயிரம் காரணங்கள் உண்டு. இது வரை அரசியலில் அசமந் தப்போக்கை கொண்டிருந்த ரஜினியின் இன்றைய திடீர் பிரவேசத்திற்கான காரணம் என்ன? இன்றுவரை ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராக, ஆன் மிக வாதியாக ஏற்று வந்த அத் தனை ரசிகர்களையும் திடீரென வாக்காளர்களாக மாற்றவேண்டிய அவசியமும், தேவையும்தான் என்ன? ஓர் அரசியல்வாதியாக அல்லது ஒரு ஹீரோவா கவே மட்டும் ரசித்துவந்த மற்றும் திரைப்படங்களில் உங்கள் கருத்துக்களை தங்கள் வாழ்க்கையிலும் ஏற்று நடந்துவந்த பாமரமக்களுக்கு அவசரமாக அதிர்ச்சியைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் என்ன? மொழி வழியாக இந்தியாவில் மாநிலங்கள் வகைப்படுத்தப் பட்டு அவரவர் ஆளும் தகுதியை அந்தந்த மக்களுக்கே வழங்கப்பட்டி ருக்கும் நிலையில் பாவம் தமிழனை மட்டும் தமிழ கத்தை ஆளவிடாமல் மாற்று மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆள நினைப்பதன் அரசியல் வஞ்சனையும், சூசகம்தான் என்ன? ரஜினி, தமிழகத்தில் வாழ்ந்துள்ள இந்த 42 ஆண்டுகாலத்தில் தமிழ் மக்களின் என்னென்ன பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்? காவிரிப் பிரச்சினை, தமிழர்களின் வாழ்வாதா ரப் பிரச்சினை, கர்நாடகா வில் வாழும் தமிழர்களின் சொத்தும் உயிர்களும் பறிக் கப்பட்டபோது, கொத்துக் கொத்தாக ஈழத்தமிழர் கொன்ற ழிக்கப்பட்டபோது, குடிநீர் ஆதார நதிகளில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக, நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது,ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, ஆந்திர வனத்துறையால் தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படபோது, மீத்தேன் எதிர்ப்பு, நீட் தேர்வு, கட்டாய இந்தி திணிப்பு எதிர்ப்பின் போது, மணல் கொள்ளை, மது ஒழிப்பு, ஹைட்ரோ கார்பன் போராட் டத்தின்போது என எந்த விவகாரங்களிலும் குரல் கொடுக்கத் தவறிய ரஜினி நரேந்திர மோடியின் பண முடக்க அறிவிப்புக்கு மட்டும் முதல் ஆளாக குரல் கொடுத்தது ஏன்? இத்தகைய ஆயிரம் கேள்விகளும் சந்தேகங்களும் மக்கள் மத்தியில் தலை விரித்தாட தமிழர் அல்லாத ஒருவர்தன் அரசியல் பாதையிலும், முதல்வர் நாற்காலி மீதும் குறி வைத்து பயணிப் பார் எனில் வருங்காலத் தமிழக ஆட்சி என்பது தமிழரல் லாத ஒருவ ரின் கையில் சிக்கித் திணறும் அதேவேளை மத்திய அரசின் கைப்பாவையாக மாறும் என்பது உறுதி. இதையெல்லாம் உணராத ஒவ்வொரு தமிழரும் தன் விரல் நுனியில் வைக்கின்ற 'மை' க்குப் பதில் 'வாய்மை' க்குப் புறம்பாக வாக்குகளை விற்று கடமை தவறுவதை ஒவ் வொரு தேர்தலிலும் தொழிலாக கொள்வார் எனில் உன்னை ஆண்ட வெள்ளைக் காரன்கூட நாளை வந்து நானும் தமிழன்தான் என உன் முதல்வர் நாற்காலிமீது குறிவைப்பான்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்