அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாக பேசினார். தனது ரசிகர்களிடம் 'போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்' என ரஜினி தெரிவித்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இதையடுத்து, ரஜினிக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமித் ஷா முதல் தமிழிசை செளந்தரராஜன் வரை பலரும் அவரை, பி.ஜே.பி-இல் இணைய அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தாக தகவல் வெளியானது. அதில் அவர், "அரசியலில் ஈடுபட வேண் டும் என்கிற முடிவுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டார். இதற்கான முதற்கட்ட ஆலோசனையை அவர் முடித்துள்ளார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக தன்னுடைய ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் மற்றும் தன்னுடைய நலன் விரும்பிகளை சந்தித்து கருத்து கேட்டு வருகிறார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ரஜினியை சந்தித்த ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிக்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அரசியலில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே ரஜினியின் நோக்கம், கொள்கை . ரஜினிகாந்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு, எதிர்பார்த்த அளவை விட அதிகமாக இருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் புதிய அத்யாயத்தை நோக்கி செல்ல இருக்கிறது. அரசியல் பிரவேசம் குறித்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து சுற்று ஆலோசனைகளை ரஜினி மேற்கொள்ள உள்ளார். அந்த ஆலோ சனைக்கு பிறகு புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இதையடுத்து, கட்சியின் கொடி, சின்னம் தொடர்பான அடுத்தடுத்த அறி விப்புகள் ரஜினியால் வெளியிடப்படும். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க மட்டுமே வாய்ப்புகள் உள்ளன. அவர் எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டார்" என்று கூறியதாக, தகவல் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து சத்யநாராயண ராவிடம் கேட்ட போது, "ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் கூறவில்லை. யாரோ தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்