ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 42-வது கோடைவிழா இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. தொடர்ந்து 29-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் கோடை விழா,மலர்க் கண் காட்சி நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று இன்று காலை ஏற்காடு கோடை விழாவை தொடங்கி வைத்தார். தோட் டக்கலைத்துறை சார்பில் ஏற்காடு அண்ணா பூங்காவில் 1 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் மலர்க்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்களால் உருவாக்கப்பட்ட ராட் சத கழுகு, ஸ்கூட்டர் ஆகியவற்றை பார்வையிட்டார். மலர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு உருவங்களையும் மலர்க் கண்காட்சியையும் சுற்றிப் பார்த்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- தொகுதி பிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளிக்க எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்தார்கள்.அரசின் திட்டத்தை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டு தூர்வாருவது பாராட்டத்தக்கது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இருக்காது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டால் கூடுதலாக 10 சதவீத தண்ணீர் தேக்கி வைக்கமுடியும். மக்களுக்காக உழைத்தவரின் படத்தைதான் சட்டமன்றத்தில் வைக்கிறோம். எம்.எல்.ஏக்களிடம் சாதி பாகுபாடு காட்டும் எண்ணம் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்