திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன்பேட்டையில் உள்ள அரிசி ஆலையில் இடி தாக்கியதில் 6 பெண்கள் உயரிழந்தனர். திருவண்ணாமலை செங்கம் தளவாநாயக்கன்பேட்டையில் உள்ள முன்னால் பேரூராட்சி மன்றத் தலைவர் சாதிக்பாஷாவின் அரிசி ஆலையில் கூலி வேலையில் 7 பெண்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். செங்கத்தில் இன்று மாலை பலத்த இடி, மின்னல் காற்றுடன் மழை பொய்ததால் 7 பெண்களும் நெல் மூட்டை வைக்கும் குடோனில் ஒதிங்கியுள்ளனர். அப்போது ஆலையின் புகை போக்கி கூண்டு மீது இடி தாக்கி புகைகூண்டு சரிந்து நெல் குடோன் மீது விழுந்துள்ளது. இதில் குடோனில் இருந்த 7 பெண்களில் 5 பெண்கள் இடர்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளனர். படுகாயம் அடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். செங்கம் தீயணைப்பு மீட்ப்பு குழுவினர் மற்றும் செங்கம் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து செங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். விசாரணையில் இறந்தவர்கள் ஆர வள்ளி, அமுதா, பார்வதி, குப்பம்மாள், குமுதா, ரேணு ஆகியோர் என்பது தெரியவந்தது. இறந்தவர்கள் அனைவரும் செங்கம் பக்கத்தில் உள்ள சொர்ப் பனந்தல் மற்றும் துவக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள். அப்பகுதியில் உள்ள மக்களிடம் கேட்டபோது, இது பழைய அரிசி ஆலை. சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுபித்து மாடன் அரிச ஆலையாக மாற்றினார்கள். அப்போது புகை கூண்டை இரும்பாலான புகை கூண்டாக வைத்துள்ளனர். அதனால் தான் இடி மிக சுலபமாக தாக்கியுள்ளது. புகை கூண்டு உடைந்து விழும் போது குடோன் பக்கத்திலேயே உள்ள மின் கம்பம் மீதும் விழுந்துள்ளது. இவர்கள் மீது சுவர் விழுந்தது இல்லாமல் மின்சாரமும் தாக்கி யிருக்கிறது. அதனால் தான் அவர்கள் உடல் வெளித்துப் போய் உள்ளது என்றனர். இது குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி மற்றும் ஆர்.டி.ஓ. உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்து வருகிறனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்