மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவை, தற்போது நாம் அனுமதித்தால், நாளை மீன் சாப்பிடுவதற்கு மத்திய அரசு தடை விதிக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வருகிறது. விவசாயக் காரணங்களுக்காக மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தது மத் திய அரசு. இருவர் முறையில் மாடுகளை விற்பவர்களுக்கும், வாங்கும் விவசாயிகளுக்கும்கூட அடையாளம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத் திய அரசின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் தலைவர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசின் முடி விற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவருடைய பேஸ்புக் பதிவில், ' மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவு நாகரீகமற்ற முடிவு. இந்த முடிவு இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிக்கும் நடவடிக்கை. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டால், நாளை மீன் சாப்பிடக் கூடாது என்று சட்டம் கொண்டு வருவார்கள். மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்