'நடிகர் ரஜினிகாந்தை பாஜகவுக்கு வரவேண்டும் என்று நான் கூறவில்லை', என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாக பேசினார். தனது ரசிகர்களிடம் 'போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்' என ரஜினி தெரிவித்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. மேலும், ரஜினி பாஜகவில் இணைந்துவிடுவார் என்ற பேச்சுக்களும் எழத்தொடங்கின. இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, 'ரஜினி பாஜகவுக்கு வரவேண்டும் என்று நான் கூறவில்லை' என கூறி யுள்ளார். மேலும், 'ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று தான் கூறினேன். அரசியலுக்கு வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண் டும்' என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, 'ரஜினி அரசியலுக்கு வந்தால் பாஜகவின் கதவு திறந்தே இருக்கும்' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்