img
img

'உங்கள் காதல் திருமணம் இப்படி முடியக்கூடாது!’
வெள்ளி 26 மே 2017 18:36:30

img

நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதோடு, போதிய புரிந்துணர்வு இல்லை. இதனால், இருவருக்கும் கவுன்சலிங் கொடுக்க பரிந்துரைசெய்துள்ளோம்' என்று போலீஸ் விசாரணை அதிகாரி தெரிவித்தார். நடிகர் பாலாஜி மீது அவருடைய மனைவி நித்யா, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதவரம் போலீஸில் பரபரப்பான வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்தார். அதில் பாலாஜி, தன் சாதியைச் சொல்லி திட்டியதாகவும் குழந்தையையும் தன்னையும் கொடுமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப் படையில், நடிகர் பாலாஜியிடமும் நித்யாவிடமும் தனித்தனியாக போலீஸார் விசாரணை நடத்தினர். நித்யாவிடம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசா ரித்தார். அப்போது, 'இருவருக்கு மிடையே அதிகளவில் கருத்துவேறுபாடு இருக்கிறது. புரிந்துணர்வும் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது' என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகச் சொல்லி எங்களுக்குத் தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்று, நித்யாவிடம் விசாரித்தோம். அவர் கொடுத்த தகவலை வாக்குமூலமாகப் பெற்றிருக்கிறோம். நடிகர் பாலாஜி, தன்னைச் சாதியைச் சொல்லி திட்டியதாகக் குறிப்பிட்டார். கணவனே சாதியைச் சொல்லித் திட்டியதாக நித்யா குற்றம் சுமத்தியதால், பாலாஜியிடம் அதுதொடர்பாக விசாரித்தோம். அதற்கு, 'என் மகளுக்குக்கூட மனைவியின் சாதியைக் குறிப்பிட்டுதான் சாதிச் சான்றிதழ் வாங்கியி ருப்பதாகத் தெரிவித்தார். மேலும், நான் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை' என்று பதிலளித்தார். அடுத்து, 'குழந்தையைக் கடத்தியதாகவும் கொடுமைப்படுத்தியதாகவும் நித்யா உங்கள் மீது குற்றம் சுமத்துகிறாரே' என்று பாலாஜியிடம் கேட்டதற்கு, 'நான், என் மனைவியைவிட குழந்தையை நூறு சதவிகிதம் நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன் என்பது, என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். அந்தக் குழந்தைக்காகத்தான் நித்யா சொல்லும் குற்றச்சாட்டுகளை அமைதியாகவும் பொறுமையாகவும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்தார். நித்யாவை நீங்கள் கொடுமைப்படுத்தியதாகச் குற்றச்சாட்டுள்ளதே என்ற கேள்வியை பாலாஜியிடம் கேட்டவுடன் அவர், யோசிக்காமல் பதில் சொன்னார். 'நித்யாவை நான் ஏன் கொடுமைப்படுத்த வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே சண்டையே வராதா? அதுபோல எங்களுக்குள் சண்டை வரும். அடுத்த நிமிடமே சமாதானமாகிவிடுவோம். நான் மற்றவர்களை சிரிக்கவைக்கும் காமெடி நடிகர். அப்படியிருக்கும்போது, என் மனைவியை அழ வைப்பேனா' என்றார். நித்யா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பாலாஜியிடம் முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளோம். அதுபோல பாலாஜி தெரிவித்த பதிலின் அடிப்படையில் நித்யா விடமும் விசாரணை நடந்துள்ளது. பாலாஜி குறித்து நித்யா, 'அவர் சொல்வதை நம்பாதீர்கள். அவர் செய்ததில் சிலவற்றைத்தான் உங்களிடம் சொல்லி யிருக்கிறேன். மற்றபடி, அவரது தனிப்பட்ட விஷயத்தை நான் பேசவிரும்பவில்லை' என்று தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த விசாரணையில், பாலாஜிக்கும் நித்யாவுக்குமிடையே கருத்துவேறுபாடு, புரிந்துணர்வு இல்லை என்பது தெரிகிறது. அவர்கள் இரு வரிடமும் மாவட்ட சமூக நல அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார். அதன்பிறகு, இருவருக்கும் கவுன்சலிங் நடத்தப்படும். அவர்கள் கொடுக் கும் அறிக்கையின்படி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாலாஜி சாதியைச் சொல்லித் திட்டியதாக நித்யா குற்றம்சுமத்தியுள்ளதால், பிசிஆர் சட்டத்தின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை உள்ளது" என்றனர். இதையடுத்து பாலாஜியிடமும், நித்யாவிடமும் நீண்ட நேரம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "நீங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளீர்கள். இது, பாலாஜிக்கு இரண்டாவது திருமணம். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்த நீங்கள், அவர்கள் முன்னால் எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். அப்படி இல்லாமல், ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொண்டே இருந்தால், இந்தப் பிரச்னைக்கு முடிவு வராது. நீங்கள் இருவரும் தீவிரமாக ஆலோசித்து ஒரு முடிவை எடுங்கள்" என்று கூறியுள்ளார். அதை இருவரும் அமைதியாகக் கேட்டுள்ளனர். பாலாஜி, நித்யா நித்யாவிடம் விசாரித்த பெண் போலீஸார், 'பாலாஜியின் சில தனிப்பட்ட பழக்கங்கள் நித்யாவுக்குப் பிடிக்கவில்லை. அப்படியான சில பழக்கங்களை அவர் கைவிட்டிருந்தால், எங்கள் குடும்பம் நிம்மதியாக இருந்திருக்கும் என்று விசாரணையின்போது நித்யா கதறியுள்ளார். அடுத்து,' நானாகத் தேர்ந் தெடுத்த இந்த வாழ்க்கை இப்படியாகும் என்று கொஞ்சம்கூட நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நானும், அவரும் பங் கேற்றபோது, ’உனக்கு நான் அதிகளவில் தொந்தரவு கொடுத்திருக்கிறேன். நித்யா என்னை மன்னித்துவிடு' என்று சொன்னபோது மேடையிலேயே நான் எமோஷனலாகிவிட்டேன். அதன்பிறகு, அங்கிருந்தவர்கள் எங்களை சமாதானப்படுத்தினர். அப்படி பொதுவெளியிலேயே அவர் தன் நடவடிக்கைகளைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதற்கு மேல் நான் என்ன சொல்ல’ என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு பாலாஜி மீது நித்யா பல குற்றச்சாட்டுக்களை அடுக்கினாலும் பாலாஜியோ, நித்யா மீது ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அதோடு, நித்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவே குறிப்பிட்டுவருகிறார். பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் நித்யாவிடம் பேசிப்பார்த்துள்ளனர். அவர் களிடம், ' என் விஷயத்தில் நீங்கள் தலையீடாதீர்கள். என்னை அவர் அந்தளவுக்கு காயப்படுத்திவிட்டார். உங்களுக்கு எல்லாம் தெரிந்தது கொஞ்சம்தான். என்னையும் என் குழந்தையையும் விட்டுவிடுங்கள்’ என்று சொல்லிக் கதறியிருக்கிறார் நித்யா.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img